Posts

டாலர் தேசம்

வந்தேறிகளின் தேசமான அமெரிக்காவிற்கு (USA) வந்தமர்ந்து பத்து வருடத்திற்கு மேலாகிறது ஆனால் இதுவரை இந்நாட்டைப்பற்றிய வரலாற்றை விரிவாக தெரிந்து கொண்டது இல்லை. சுற்றுலாவாசியாக வந்த என் அம்மா செவ்விந்தியர்களைப் பற்றி ஆர்வத்துடன் கேட்டாள். என் அப்பாவோ விர்ஜினியா புகையிலைப் பற்றியும் பாஸ்டன் தேநீர் விருந்தைப்பற்றியும் தான் அறிந்ததை பகிர்ந்து கொண்டார் ஆனால் இங்கு வந்திறங்கிய புதிதில் எனக்கு இது எதைப்பற்றியும் தெரிந்திருக்கவில்லை (என் வரலாற்றறிவு அப்பிடி!!!). அடுத்தடுத்து வந்த வருடங்களில் திரைப்படங்கள், டாக்குமெண்டரிகள் மூலமும் ஏதாவது சர்ச்சையான செய்திகள் வெளிவரும் பட்சத்தில் அதில் உள்ள வரலாற்று பின் புலத்தை கூகுள் செய்தும், எனது கணவரிடம் கேட்டும்  சிறிது சிறிதாக அறிந்து கொள்ளத் துவங்கினேன். வரலாற்றில் இடம் பிடித்த முக்கிய புள்ளிகளையும் சரித்திர நாயகர்களைப் பற்றியும் என் குழந்தைகள் படிக்கும் நூலக புத்தகங்கள் வாயிலாகவும் தெரிந்து கொள்ள வாய்ப்பு அமைந்தது. மிக சமீபத்தில் நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் பா. ராகவன் எழுதிய "டாலர் தேசம் - அமெரிக்காவின் அரசியல் வரலாறு" என்னும் புத்தகத்தை ...

Ramayan (1987 TV Series)

கடந்த மார்ச் முதல் கொரோனா- வால் உலகமே முடங்கியது... இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது அனைவரும் அறிந்ததே. இதன் விளைவாக இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் தற்காலிகத் தடங்கல் ஏற்பட பழைய நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் மறு ஒளிபரப்பாகத் தொடங்கின. அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் 1987-ம் ஆண்டு வெளிவந்த ராமாயணம் தொடரை ஒளிபரப்ப 77 மில்லியன் மக்களால் அது  பார்க்கப்பட்டு உலக சாதனையில் இடம் பிடித்ததாக விக்கிபீடியா கூறுகிறது. அதைத் தொடர்ந்து ராமாயணம் தொடர்பான மீம்ஸ்களும், டிக் டாக் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவியதும் அதில் நடித்த நடிகர்களின் தற்போதைய நிலை என்ன?! போன்ற வீடியோக்கள் வைரல் ஆனதும் நாம் அறிந்ததே!!!  கடந்த ஆண்டுகளில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களால்  தயாரிக்கப்பட்டு ராமாயணம் தொடராக வெளிவந்திருந்தாலும் (முதன் முறையாக)  33 வருடத்திற்கு முன் உருவாக்கப்பட்ட இந்த  பழமையான  தூர்தர்ஷன் தொடருக்கே மவுசு அதிகம் என்று நிரூபணம் ஆனது.  எனது மாமியாரும் ராமானந்த சாகரால் எழுதி இயக்கப்பட்ட இத்த...

கடவுள் தொடங்கிய இடம்

 அ.முத்துலிங்கம் எழுதிய "கடவுள் தொடங்கிய இடம்" என்னும் நாவலை எனது கணவரின் அறிமுகத்தின் பேரில்  சமீபத்தில் படிக்க நேர்ந்தது. 2014-ம் ஆண்டில் வெளிவந்த இப்புத்தகம் ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்திருக்கிறது. கதையின் தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ ஆன்மீகம், சித்தாந்தம் குறித்த புத்தகமோ என்று எண்ணிவிட வேண்டாம். இனப்போர் காரணமாக பல்லாயிரம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்த விவரம் நாம் அறிந்ததே எனினும் அவர்கள் அகதி என்ற அந்த அந்ததஸ்தைப் (?) பெற  எப்படிப்பட்ட பயணத்தை மேற்கொண்டனர்  என்பதை மிக விவரமாக நமக்கு எடுத்துக் கூறும் முயற்சியே "கடவுள் தொடங்கிய இடம் " எனலாம். கதை மாந்தர் நிஷாந்த் 1994-ல்  யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு  எவ்வாறு, எப்போது  கனடாவை அடைந்தார், அவரைப் போல் புலம் பெயர்பவர்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு உதவும் ஏஜெண்டுகள் எவ்வாறு செயல்படுகிறார்கள்  என்பதையும்  எதார்த்தம் கலந்து எவ்வித  மிகையுமின்றி ஆசிரியர் எழுதியிருக்கிறார் அதற்காக விறுவிறுப்பில்லை என்று நினைத்து விடவேண்டாம். கதை தொடங்கியதிலிருந்து முடிவது வரை ...