Posts

Bell Bottom (Hindi)

 Ranjit.M.Tewari இயக்கத்தில் Akshay Kumar ஹீரோவாக நடித்து, உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு Amazon Prime-ல் வெளிவந்திருக்கும் திரைப்படம் "Bell Bottom". படத்தின் ட்ரைலரைப் பார்த்தாலே கதை எதை மையமாகக் கொண்டு நகரப் போகிறது என்பதை தெரிந்து கொண்டு விடலாம் எனினும் கதை பயணம் செய்யும் பாதை எவ்வளவு பரபரப்பாக விவரிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள முழுப்  படத்தை பார்க்க வேண்டியது அவசியமாகிறது. வரலாற்றுச்  சம்பவங்கள் அதிலும் கிட்டத்தட்ட 30-35 வருடத்திற்கு முன்  நடந்த நிகழ்வுகள் தான் படமாக்கப்பட்டிருக்கிறது என்பதால் இப்படத்தை காணும்  ஆர்வம் நம்மில் இயற்கையாகவே அதிகரிக்கிறது எனலாம். "படத்தின் துவக்கத்தில் கடத்தப்படும் விமானம் எவ்வாறு மீட்கப்படுகிறது? இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? தீவிரவாதிகள் பிடிபட்டார்களா? உயிர் சேதம் இருந்ததா? " என்பதை முடிந்த மட்டும் இயக்குனர் மிக விறு விறுப்பாகவே படமாக்கி இருக்கிறார். படத்தின் கடைசி அரை மணி நேரம் Super Fast. கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடக்கிறது  கவனமில்லாமல் படம் பார்த்தீர்களானால் Rewind செய்து பார்க்க வே...

Home (Malayalam)

என் தோழியின் பரிந்துரையின் பேரில் நான் சமீபத்தில் பார்த்த திரைப்படம் "Home". மலையாள படங்களின் மேக்கிங், நடை முதலியவை எனக்கு பழக்கம் ஆதலால் படத்தின் வேகம் என்னை பெரிதும் பாதிக்கவில்லை. கதை என்னவாக இருக்கும் என்பது படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நமக்குத் தெரிந்துவிடுகிறது எனினும் அக்கதை யாரை எல்லாம் அழைத்துக் கொண்டு  எங்கெல்லாம் பயணம் செய்து முடியப்போகிறது என்பதைத்  தான் நாம் அடுத்த 2:45 மணி நேரம் பொறுமையாக பார்க்க வேண்டிய இருக்கிறது. இன்றைய கால கட்டத்தில் நாம் அனைவருமே தொழில் நுட்பத்தால் ஆட்டி வைக்கப்படும் கைப்பாவைகள் தான், கைபேசியின் அடிமைகள் தான் அதில் சந்தேகம் ஒன்றும் இல்லை அதிலிருந்து அவ்வப்போது வெளிவருவது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவருக்கும் நலம் பயக்கும் என்பதை இயக்குனர் போதனைப் படமாக இல்லாமல் ரசிக்கும் படி சொல்ல முயன்றிருக்கிறார். திரைக்கதை தான் இத்திரைப்படத்தின் "Hero". இயக்குனர் Rojin Thomas மிகப் பொறுமையாக அதை வடிவமைத்திருக்கிறார். மலையாளப் படங்கள் என்றால் கண்ணுக்கினிய காட்சிகளுக்கும் அதோடு இணைந்த  இனிய பாடல்களுக்கும்  என்ன குறை? ...

கர்ணன்

ஏப்ரல் மாதம் Prime-ல் வெளியான இப்படத்தைப் பார்க்க இப்பொழுதுதான் எனக்கு  தைரியம் வந்தது. படத்தின் One Liner-யைத் தவிர வேறு விவரங்கள் எனக்குத் தெரியாததாலும் இப்படத்தைப் பற்றிய Promo-க்களை அதிகம் பார்க்காததாலும் எனக்கு படம் நேற்று வெளிவந்தது போன்ற தாக்கத்தையே ஏற்படுத்தியது. "பரி ஏறும் பெருமாள்"-யைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு தான் இந்த " கர்ணன்". எதிர்பார்த்த அளவு படத்தில் வன்முறை இல்லை எனினும் "இதோ இவனை கொலை செஞ்சுருவாங்க போல", "இந்த சின்ன பையனை ஏதாச்சும் பண்ணிருவங்களோ" என்ற பதைபதைப்புடனேயே படம் பார்க்க வேண்டி இருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் அதற்குத்  துணை செல்கிறது. பாரதிராஜாவை அடுத்து மாரி செல்வராஜ் கிராமத்து வாழ்க்கையையும் அதன் மக்களையும் நம் கண் முன்னே அரிதாரம் பூசாமல் காட்டி இருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது. சொந்த அனுபவம் இல்லாமல் இதைச் செய்யவே முடியாது. மனதில் இருந்து வந்ததால் தான்  வெற்றியும் அடைந்திருக்கிறது. படத்தில் இயக்குனர் பல்வேறு குறியீடுகளின் மூலம் ஏகப்பட்ட சங்கதிகளைச் Subtle ஆக சொல்லிக்கொண்டே செல...

நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி -7

 இப்படியே இவ்விரு நாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக என்னென்ன செய்தன என்பதையும் அதில் பாலஸ்தீன அப்பாவி மக்கள் "இண்டிஃபதா" என்ற பெயரில் எப்படி ஈடுபட்டார்கள், பாடுபட்டார்கள்  என்பதையும் மிக மிக விளக்கமாகவே  கூறுகிறார். இப்படியே இருந்தால் எப்படி என்று நார்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் 1993-ல்  நடந்த அமைதி ஒப்பந்த  நடவடிக்கையை ஆதரித்த அராஃபத் மேல்  மக்கள் கோபம் கொள்கிறார்கள்!!! இப்பொது நாம் அனைவருக்கும் பரிச்சயமான  சதாம் ஹுஸைனும் (குவைத் யுத்தம்) கதைக்குள் வருகிறார் இங்கு நாம் புரிந்து கொள்வதற்கு வசதியாக இலங்கை விடுதலைப் புலிகளின் போராட்டங்களை  ஒப்பிட்டு அலசுகிறார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடம் பிடிப்பதில் மட்டும் பிரச்னை இல்லை அல் அக்ஸா மசூதியை இடித்து விட்டு Synagogue கட்டுவது, ஒரே புனிதத்தலம் என்று மத ரீதியிலான பிரச்னை வேறு!!! இரு நாடுகளுமே ஆயுத தாக்குதலைதான் செய்தது. பாலஸ்தீனம் செய்தது தீவிரவாதம்..இஸ்ரேல் செய்தது போர் எனப்பட்டது!!! 1979-ற்கு அடுத்ததாக அமெரிக்கா 2001-ல்  அமைதி நடவடிக்கைக்கான "Road Map" வரைந்து கொடுத்து "இனிமேயாச்சு...

நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி - 6

 ஒரு அப்பத்தை குரங்கிடம் கொடுத்து சரி சமமாக பங்கு கேட்ட இரண்டு பூனைகளுக்கு நடந்த கதை உங்களுக்கு தெரியும் தானே? அதே முடிவு தான் ஐ.நா. கொடுத்த நிலத்தை ஏற்காத பாலஸ்தீனுக்கும்  நடந்தது. எகிப்து, லெபனான், சிரியா, ஈராக், ஜோர்டான் கூட்டணியில் பாலஸ்தீன் அன்று பிறந்த இஸ்ரேலை எதிர்த்தது. எதிர்பாரா விதமாக இஸ்ரேலின் கை ஓங்க, ஐ.நா. அமைதிப் பேச்சு எடுக்க..  வென்ற பகுதிகளை கூட்டணி நாடுகள் தங்கள் வசப்படுத்திக் கொண்டு பாலஸ்தீனை கைவிட்டு விட்டது. இப்போது பாலஸ்தீனமே வரைபடத்தில் இருந்து இல்லாமல் போனது..பாலஸ்தீனியர்கள் முதல் முதலாக அகதிகள் ஆகினார்கள்!!! இப்படியாக சென்று கொண்டிருந்த கதைக்கு ஒரு Break கொடுத்து விட்டு பாலஸ்தீனியர்களுக்கு ஓரளவு நன்மை செய்ய முயற்சி செய்த யாசர் அராபத் பற்றி சற்று விரிவாகவே எழுதியிருக்கிறார். தமிழ் சினிமா பார்ப்பது போல் இருந்தது!!! வரலாற்றில் இஸரேலுக்கு பெயர் வாங்கித் தந்த சூயஸ் கால்வாய் பிரச்னையைப் பற்றியும் "Three Musketeer" Operation குறித்தும் சுவாரஸ்யமாக விவரிக்கிறார். Side Track-ல் எகிப்தின் ராணுவ ஆட்சியும் அங்கிருந்த அரசியில் சூழல் பற்றியும்  நமக்கு தெரி...

நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி -5

  யூதர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை உலகம் சுழலாமல் நிற்குமா என்ன?முதல் உலக யுத்தம் வருகிறது அதிலும் யூதர்கள் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி என்று தாங்கள் தங்கியிருக்கும் தரப்பிற்காக மட்டுமல்லாமல்  தங்களின் தேசக்கனவு நனவாகும் என்ற ஆவலுடன் பங்கேற்கிறார்கள் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆயுதங்களும் விஷ வாயுவும் யூதர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை தான்!!  1917-ம் ஆண்டு பிரிட்டன், துருக்கியின் ஆளுகைக்கு உட்பட்ட பாலஸ்தீனை தாக்கியது. அதில வெற்றியும் கண்டது. யூதர்களுக்கு அளித்த வாக்குப்படி "பா ஃல்பர்" பிரகடனம் உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் லாபங்கள் பிரிட்டனுக்கு இல்லாமல் இல்லை. இஸ்ரேல் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டதே ஒழிய தங்கள் கனவு நிஜமாக யூதர்கள் இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை தான் வந்தது. புத்தகத்தின் இப்பகுதிக்கு வந்ததும் தான் நாம் தற்காலத்தில்  கேள்விப்படும் மேற்கு கடற்கரை, காஸா போன்ற இடங்கள் பரவலாக குறிப்பிடப் படுகின்றன.அப்பொழுதும் கூட ஜோர்டானில் மன்னர் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாலஸ்தீனிய அரேப...

நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி -4

பல்வேறு ஐரோப்பிய தேசங்களுக்குச் சென்று Settle ஆகியிருந்த யூதர்களை  மறுபடியும் காலம் விரட்டி அடிக்கத் தொடங்கியது. கி,பி.1492-ல் உயிர் பிழைக்க வேண்டுமென்றால் வேறு வழி இல்லை என்ற நிலையில்  ஸ்பெயினிலிருந்து வெளியேறி ஹாலந்து , மொராக்கோ, பிரான்ஸ், இத்தாலி என்று  குடியேறினார்கள். அதிகம் பேர் மத்திய ஆசியாவிற்கு வந்தனர் என்கிறார் ஆசிரியர். அதன் பின் போர்ச்சுகீசியர்களாலும் விரட்டி அடிக்கப்பட்ட யூதர்கள் சுல்தான்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சிரியா மற்றும் துருக்கியில் மனமுவந்து ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். தாங்கள் இடம் பெயர்ந்த தேசங்களில் இருந்து கொண்டு தங்களின் புராதான மொழியான ஹீப்ருவை யூதர்கள் மீட்டுக் கொண்டிருந்த வேளையில் பதினாறாம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் கிங்- ஆல் ப்ராட்டஸ்டண்ட் ஆரம்பிக்கப்பட்டதன் விளைவாக கிருஸ்துவைக் கொன்றவர்கள் என்ற பெயரில் யூதர்கள் மேல் கிருத்துவர்களுக்கு இருந்த வெறுப்பு எவ்வாறு பன் மடங்கு பெருகியது என்பதை இங்கு  மிக விரிவாக அலசுகிறார் ஆசிரியர். நாடு கடத்தப் பட்டுக்கொண்டிருந்த யூதர்கள் ஐரோப்பிய தேசங்களில் சித்திரவதை செய்யப்பட்டு...