Kooman (மலையாளம் )
2023-ம் ஆண்டில் நான் பார்த்த படங்களில் விமர்சனத்திற்கும் பிறருக்கு பரிந்துரைக்கவும் தெரிவான படம் "Kooman". படம் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் ஒரு மாதிரியாக நம்மால் கதையை யூகிக்க முடிகிறது என்றாலும் முழுதாக அந்த யூகத்தை மெய்யாகாமல் நம்மை பரபரக்க செய்து வெற்றி அடைகிறார் "திரிஷ்யம்" புகழ் இயக்குனர் "Jeetu Joseph". வழக்கமான மலையாளப் படங்களைப் போல மெதுவாக விரிவாகச் சென்றாலும் விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சமில்லை. மலையாள இயக்குனர்கள் ஒரு கதாபாத்திரத்தைக் கூட வீணடிப்பதில்லை என்று நான் என்னுடைய பல விமர்சனக்களில் சிலாகித்து எழுதியதுண்டு. இதிலும் அப்படியே. அனைவரும் அவரவர் பணியை செவ்வனே செய்து விடுகிறார்கள். கதாநாயகனாக வரும் ஆசிப் அலி - கண்களாலே மிரட்டுகிறார் - Fahad Fasil-ஐ நினைவூட்டுகிறார். [அவர் நடித்த "Kuttavum Sikshayum" படமும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும் ] மணியனாக வரும் "ஜாபர் இடுக்கி"-க்கு வித்யாசமான கதாபாத்திரம். அனாசயமாக அசத்தி இருக்கிறார். படத்தின் முடிவு சற்று commercial பாதையை நோக்கி சென்று விட்டதோ என்ற கு...