Posts

Showing posts from March, 2023

நாயகன் (1987)

Image
அனைவராலும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படும் சரித்திரப்படமான பொன்னியின் செல்வன் -2 வரும் ஏப்ரல் 28-ம் நாள் உலகெங்கும் வெளிவர இருக்கும் இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் 35 வருடங்களுக்கு முன் வெளிவந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்த "நாயகன்" திரைப்படத்தைப் பற்றி எனது கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே நாயகன் திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்து வந்திருக்கிறேனே தவிர முழுப்படத்தையும் கவனமாக பார்த்ததில்லை ஏனோ (இளவயதில்) பார்க்கத் தோன்றவும் இல்லை. "மணிரத்னம் படத்துக்கு  கூட்டிட்டு போனாலே (காட்சிகள் இருட்டாக இருப்பதால்) பசங்களுக்கு காச்சல் வந்துருது" என்ற எனது அம்மாவின் கமெண்ட் காரணமாகவும் இருக்கலாம் 😆 நாயகன் படம் என்றாலே "நீங்க நல்லவரா? கெட்டவரா?", "அவங்கள நிறுத்த சொல்லு நானும் நிறுத்துறேன்", "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல" ", Mera Baba Mar Gaya" போன்ற famous வசனங்களும் கமலும் இளையராஜாவும் கரகர குரலில்  கண்ணீரை வரவழைக்கும் வண்ணம் பாடி இருக்கும்  "தென்பாண்டிச் சீமை

Doctor G

Image
ஆயுஷ்மான் குரானா-வின் நடிப்பில் இயக்குனர் Anubhuti Kashyap-ன் இயக்கத்தில் சென்ற வருட கடைசியில் வெளிவந்த திரைப்படம் "Doctor  G". போபாலில் M.B.B.S முடித்த கையோடு M.D. Ortho படிக்க ஆசைப்படும் கதாநாயகன்  பல்வேறு காரணங்களால் M.D. Gyno-ல் (விருப்பமில்லாமல்) சேர்கிறார்.அதனால் என்னனென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்? எவ்வாறு அவற்றை சமாளிக்கிறார்? மகப்பேறு மருத்துவம் பெண்களுக்குரியது என்ற அவருடைய குறுகிய பார்வை மாறியதா? போன்ற கேள்விகளுக்கு விடையளித்து சுபத்தில் முடிவடைகிறது "Doctor G" திரைப்படம். வழக்கம்போல் ஆயுஷ்மான் உதய் alias Guddy என்ற கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக சென்று அமர்கிறார் ஆனால் அதுவே அவருக்கு பாதகமாகவும் அமைந்து விடுகிறது ஏனெனில் அவருடைய முந்தைய படங்களை நினைவுறுத்தும் வண்ணமே இந்த கதாபாத்திரமும் எழுதப்பட்டிருப்பது போன்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. ஆணாதிக்க, பிற்போக்கு வாதியாக அவரை சித்தரித்த விதத்தில் அவர் மேல் நமக்கு ஒன்றும் அவ்வளவு கோபம் வரவில்லை மாறாக அவர் கூறும் சில விஷயங்கள் நியாயமாகவே படுகிறது. அவரின் நண்பராக வரும் "Chaddi" நன்றாக நடித்திருந்த

ஒரு புளியமரத்தின் கதை - புத்தக விமர்சனம்

Image
தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமியின் படைப்புகளில் நான் வாசித்த முதல் புத்தகம் "ஒரு புளியமரத்தின் கதை". 1966-ல் வெளிவந்திருக்கும் இந்நாவல் தான் அவரின் முதல் படைப்பும்  கூட!!! நான் காற்று வாக்கில் இப்புத்தகத்தைப் பற்றியும் அதன் ஆசிரியரைப் பற்றியும் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்தாளர்  ஜெயமோகனின் வலைத்தளத்திலும் சிலமுறை வாசித்திருக்கிறேன் எனினும் அவரின் கதைகள் எதையும் வாசிக்கும் வாய்ப்பு இதுவரையிலும் அமையவில்லை. இப்புத்தகத்தை கையில் எடுக்கும் முன் கதை இப்படி இருக்கும் என்று என் மனதில் ஒரு சித்திரத்தை வரைந்து வைத்திருந்தேன் ஆனால் அதை முற்றிலும் தவிடுபொடி ஆகிவிட்டது இந்நாவல் என்று சொன்னால் மிகை ஆகாது. ஆசிரியர் தன்னுடைய கோணத்தில் இருந்தே இக்கதையை  சொல்லிக்கொண்டு வருகிறார். வாழ்வில் அவர் சந்தித்த, சிலாகித்த மனிதர்களை பின்புலத்திலும் புளியமரத்தை முன் புலத்திலும் கொண்டு கதையை நகர்த்துகிறார். தொடக்கத்தில் நாகர்கோவில் வட்டார வழக்கை வாசிக்க எனக்கு சிரமமாக இருந்தது தான் எனினும் கதையின் விறுவிறுப்பு அதை ஒரு பொருட்டாக நினைக்க விடவில்லை. முதல் 6,7 பகு