Posts

Showing posts from August, 2022

Laal Singh Chaddha (LSC)

Image
ஆஸ்கார் விருது பெற்ற "Forrest Gump"  என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்ற அறிவிப்போடு பலரால், முக்கியமாக என்னைப் போன்ற 'Tom Hanks" ரசிகர்களால் பெரிதும்  எதிர் பார்க்கப்பட்ட திரைப்படம் "Laal Singh Chaddha (LSC)". பல வித காரணங்களுக்காக  இத்திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி சமூக வலைத்தளங்களில் கடும்  பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில்  இம்மாதம் 11-ம் தேதி இந்தியாவில் Laal Singh Chaddha (LSC) திரைக்கு வந்துள்ளது.  இயக்குனர் Advait Chandhan கதையில் பெரிதாக மாற்றம் ஏதும் செய்யாமல் நம் நாட்டிற்கேற்ப திரைக்கதையில் மாற்றங்களைச் செய்து ஆங்காங்கே ரசிக்கும் விதமான காட்சிகளோடு  எமோஷனல் மற்றும் நகைச்சுவை என்னும் உப்பு. காரத்தைக் கலந்து சுவையாகவே படைத்திருக்கிறார். எழுபதுகளில் தொடங்கும்  Laal Chaddha-வின் வாழ்கை அந்தந்த கால கட்டத்தில் நிகழும் முக்கிய நிகழ்வுகளால்  எவ்வாறு திசை திரும்புகிறது என்பதை காட்டியவாறு நிறைவுறுகிறது. முக்கிய நிகழ்வுகள் என்றாலே அரசியலும் சினிமாவும் தானே!!! ஆங்கிலப் படத்தில் நாயகன் கல் பெஞ்சில் அமர்ந்தவாறு கதை சொல்லுவார் ஆனால் Amir Khan ஓடும் ரயிலில்

Rocketry : The Nambi effect

Image
நடிகர் ஆர்.மாதவன் உண்மைக்கதையை கையில் எடுத்துக் கொண்டு தயாரித்து, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அவதரித்திருக்கும் திரைப்படம் "Rocketry : The Nambi effect". நாராயணன் நம்பி என்பவர் யார்? ISRO - வில் அவர் ஆற்றிய பணி எத்தகையது, விண்வெளி ஆராய்ச்சியில் அவரின் பங்களிப்பு எந்த அளவிற்கு போற்றுதற்குரியது, எதிர்பாரா விதமாக அவருக்கு ஏற்பட்ட அவமானம் என்ன? போன்ற கேள்விகளுக்கு நம்மில் பலர் திரைப்படம் பார்க்காமலேயே சமூக வலைத்தளங்களின் உதவியுடன் விடை அறிந்து கொண்டுவிட்டோம் ஆகையால் இந்த திரைப்படத்தை அந்த கோணத்தில் அலசுவதும் விவாதிப்பதும் தேவையற்றது என்பது எனது தாழ்மையான கருத்து. Rocketry : The Nambi effect ஒரு திரைப்படமாக என்னை எந்த அளவிற்கு கவர்ந்தது என்பதை மட்டுமே  உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓடும் இத்திரைப்படத்தை பரபரப்பு குறையாமல் மாதவன் கொடுத்திருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.  இயக்குனர் மணிரத்தினத்தின் சாயல் காட்சி அமைப்புகளில் உணர முடிந்தது எனினும் அனைவரும் காதில் கேட்கும் விதமாக  வசனங்களை பேசி நடித்திருப்பது ஆறுதல்.  படம் எங்கெல