Posts

Showing posts from April, 2021

Dilwale Dulhania le Jayenge (DDLJ)

இந்தியாவிலேயே அதிக வருடங்களாக திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம், மனதை சுண்டி இழுக்கும் பாடல்கள், ஷாருக்கான் மற்றும் கஜோலின் இளமைத் துள்ளலுடன் கூடிய நடிப்பு என்று இப்படத்திற்கு பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும் "சூப்பர் Movie " என்று பல பேர் எனக்கு கதை சொல்லியிருந்தாலும்  நான் இதுவரை இப்படத்தை முழுமையாகப் பார்த்ததில்லை!!! நம் அறிவால் அல்ல நம் மனதால் சிந்திக்க வைக்கும் DDLJ-வை இந்தக் கொரோனா கால கட்டத்தில் ஒரு வழியாகப் பார்த்து விட்டேன். படம் தொடங்கி அரைமணி நேரத்துக்குள்ளாகவே இப்படத்தின் கதை என்னவாக இருக்கப்போகிறது என்று இயக்குனர் தனது பாத்திரங்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக விவரித்து விடுகிறார் இருப்பினும் அடுத்த இரண்டரை மணி நேரத்திற்கு நம்மால் அமர்ந்து படத்தை பார்க்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் திரைக்கதை மற்றும் பாடல்கள். இப்படத்தின் கதையை 1995-க்கு மேல் பலவாறு பல படங்களில் காட்டப்பட்டு விட்டது ஆனால் ஒரிஜினலுக்கு (முதலில் வந்தது) என்று ஓர் சிறப்பு உண்டல்லவா அதுவே படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அக்காலத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட ஷாருக்கானின் க