Posts

Showing posts from January, 2022

Mimi - Hindi Movie

Image
2021-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று என சில பல வலைத்தளங்கள் பரிந்துரைத்ததாலும் Netflix-ல் காணக் கிடைத்ததாலும் நாம் சமீபத்தில் பார்த்து ரசித்த படம் " Mimi". அமெரிக்க தம்பதிகளாக ஜானும் சம்மரும் தங்களுடைய குழந்தையை சுமந்து பெற்றெடுக்க ஒரு வாடகைத் தாயை (Surrogate Mother) சில வருடங்களாக தேடித் கொண்டிருப்பதாக தொடங்குகிறது படம். எதிர்பார்த்தபடி ஒரு தாயை கண்டு பிடிக்க முடியாத வருத்தத்தில் இருக்கும் அவர்களின் பார்வையில் படுகிறாள் டான்சர் Mimi (Kirti Sanon). அவளையே ஒத்துக் கொள்ள வைப்பதாக வாக்களிக்கும் தங்கள் டிரைவர் Bhanu Pratap (Pankaj Tripati)-யை நம்பி பொறுப்பை ஒப்படைகின்றனர். பண தேவை இருப்பதால் மிமியும் இதற்கு ஒப்புக் கொள்ள அனைத்தும் சுமூகமாக செல்கிறது. குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களே இருக்கும் சமயத்தில் எதிர்பாரா காரணங்களால் அமெரிக்க தம்பதியர் குழந்தையை கை விட அதை என்ன செய்வது என்று தெரியாமல் முச்சந்தியில் நிராதரவாக  நிற்கிறாள் மிமி. மிமி குழந்தையை பெற்றெடுத்தாளா? திருமணமாகாமல் கர்ப்பிணியாக நிற்கும் அவளை Judge செய்யும் சமூகத்தை எப்படி சமாளித்தாள்?

சத்திய சோதனை

நான் சமீபத்தில் வாசித்து முடித்த புத்தகம் மகாத்மா காந்தியின் சுயசரிதையான "சத்திய சோதனை- ரா. வேங்கடராஜுலு-வின் தமிழாக்கம்".  623 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தை (பனிரெண்டாம் பதிப்பு) நவஜீவன் பிரசுலாயம் வெளியிட்டுள்ளது.  இந்தியர்களாக பிறந்த அனைவரும் தங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு சமயத்தில் இப்புத்தகத்தை கடந்துதான் வந்திருப்பர். முழுவதுமாக வாசிக்கும் வாய்ப்பு இல்லாதிருந்தாலும் இப்புத்தகத்தில் குற்றிப்பிடப்பட்டுள்ள ஒரு  சில முக்கிய நிகழ்வுகளையாவது  அறியாதவர் இருப்பது அரிது. சராசரி மனிதனாக இருந்த மோகன்ராம் காந்தி எவ்வாறு மகாத்மா ஆனார், அவரின் வாழ்க்கைப்பயணம்  அவரை எவ்வாறு அப்பாதையில் இட்டுச் சென்றது என்பதை இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. செயற்கைத்தன்மை எள்ளளவும் இன்றி மகாத்மா இதை விவரித்திருப்பது அற்புதம்.  காலம் கடந்தும் இப்புத்தகம் நிலைத்து  நிற்பதற்கு அதுவே காரணம் என்றும் தோன்றுகிறது. அவரின் இளைமைக்காலங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் அத்தியாயங்கள் நாம் அனைவரும் அறிந்ததே. பின் அவர் பாரிஸ்டர் ஆவதற்கு லண்டன் செல்கிறார். கூச்ச சுபாவம் க

ஜெய் பீம்

"ஜெய் பீம்" திரைப்படம் அமேசான் பிரைமில் வெளிவந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டிருந்தாலும் பல பேர் இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் சேர்த்து விட்டிருந்தாலும், இதன் மேல் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு பிரபலமடைந்திருந்தும் படத்தைப் பார்ப்பதற்கு ஏனோ வித தயக்கம். படத்தின் கதையை ஓரளவு நாம் அறிந்திருப்பதும் கதைக்களத்தை மனதில் கொண்டு அதில் வரவிருக்கும் காட்சிகளை நாம் யூகித்திருப்பதும் தான் நமது தயக்கத்திற்கு காரணம் அவ்வாறு எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு "படத்தின் வெகு சில காட்சிகளை Forward செய்து விட்டீர்களானால் நீங்கள் தாராளமாக பார்க்கலாம்" என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.   கர்ணன் திரைப்படத்தைத் தொடர்ந்து உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நம் முன் கொண்டு வந்திருக்கும் மற்றுமொரு திரைப்படம் "ஜெய் பீம்". காலம் காலமாக சாதீய வன்கொடுமை, அத்து மீறல்கள் பற்றிய திரைப்படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றது உதாரணமாக பாரதிராஜா தனது கிராமத்திய படங்களில் பின்னணியில் காட்டியிருப்பார் ஆனால் முன்