Posts

Showing posts from November, 2022

KGF

 அதீத வன்முறைக் காட்சிகள், Anti-Hero, Punch/Cringe Dialogues இவைகளைக் கண்டாலே அத்திரைப்படத்தை choice-ல் விட்டுவிடும் வழக்கம் கொண்ட நான் இந்த மூன்று அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட 'KGF" திரைப்படத்தை (ஏதோ ஒரு உந்து சக்தி என்னை ஊக்கித்தள்ள) சமீபத்தில் பார்த்து விட்டேன். படம் ஆரம்பித்த சில நிமிடங்கள் "Over Build-up ஆ இருக்கே", "ஐயோ முடியலடா சாமி", "இப்பவே கண்ண கட்டுதே" போன்ற வசனங்களை Mind Voice-ல் ஓட விட்டு அமர்ந்திருந்தேன் ஆனால் எப்போது நான் படத்தின் ஓட்டத்தோடு  ஒன்றிப்போனேன்? என்று குறிப்பிட்டு கூற முடியாத ஒரு தருணத்தில் ஆ என்று  என்னையே நான் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டேன்!!! படத்தின் நிறை, குறைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம் ஆனால் இப்படம் தேசிய அளவில் வெற்றி பெற்றதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது அது என்னவென்று அறுதியாக கோடிட்டு காட்ட என்னால் முடியவில்லை. விறு விறுவிறுவென்று நகரும் திரைக்கதையா? Rocky Bhai ஆக வரும் Yash மீது நமக்கு எந்தவித "Predefined Judgement"-ம் இல்லாததாலா? களத்தில் நம்மை கட்டிப்போடும் BGM மற்றும் பாடல்களா? அம்மா செண்டிமெண்