கடவுள் தொடங்கிய இடம்
அ.முத்துலிங்கம் எழுதிய "கடவுள் தொடங்கிய இடம்" என்னும் நாவலை எனது கணவரின் அறிமுகத்தின் பேரில் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. 2014-ம் ஆண்டில் வெளிவந்த இப்புத்தகம் ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்திருக்கிறது. கதையின் தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ ஆன்மீகம், சித்தாந்தம் குறித்த புத்தகமோ என்று எண்ணிவிட வேண்டாம். இனப்போர் காரணமாக பல்லாயிரம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்த விவரம் நாம் அறிந்ததே எனினும் அவர்கள் அகதி என்ற அந்த அந்ததஸ்தைப் (?) பெற எப்படிப்பட்ட பயணத்தை மேற்கொண்டனர் என்பதை மிக விவரமாக நமக்கு எடுத்துக் கூறும் முயற்சியே "கடவுள் தொடங்கிய இடம் " எனலாம். கதை மாந்தர் நிஷாந்த் 1994-ல் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு எவ்வாறு, எப்போது கனடாவை அடைந்தார், அவரைப் போல் புலம் பெயர்பவர்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு உதவும் ஏஜெண்டுகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதையும் எதார்த்தம் கலந்து எவ்வித மிகையுமின்றி ஆசிரியர் எழுதியிருக்கிறார் அதற்காக விறுவிறுப்பில்லை என்று நினைத்து விடவேண்டாம். கதை தொடங்கியதிலிருந்து முடிவது வரை ...