Ramayan (1987 TV Series)
கடந்த மார்ச் முதல் கொரோனா- வால் உலகமே முடங்கியது... இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது அனைவரும் அறிந்ததே. இதன் விளைவாக இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் தற்காலிகத் தடங்கல் ஏற்பட பழைய நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் மறு ஒளிபரப்பாகத் தொடங்கின. அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் 1987-ம் ஆண்டு வெளிவந்த ராமாயணம் தொடரை ஒளிபரப்ப 77 மில்லியன் மக்களால் அது பார்க்கப்பட்டு உலக சாதனையில் இடம் பிடித்ததாக விக்கிபீடியா கூறுகிறது. அதைத் தொடர்ந்து ராமாயணம் தொடர்பான மீம்ஸ்களும், டிக் டாக் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவியதும் அதில் நடித்த நடிகர்களின் தற்போதைய நிலை என்ன?! போன்ற வீடியோக்கள் வைரல் ஆனதும் நாம் அறிந்ததே!!! கடந்த ஆண்டுகளில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களால் தயாரிக்கப்பட்டு ராமாயணம் தொடராக வெளிவந்திருந்தாலும் (முதன் முறையாக) 33 வருடத்திற்கு முன் உருவாக்கப்பட்ட இந்த பழமையான தூர்தர்ஷன் தொடருக்கே மவுசு அதிகம் என்று நிரூபணம் ஆனது. எனது மாமியாரும் ராமானந்த சாகரால் எழுதி இயக்கப்பட்ட இத்த...