Posts

Showing posts from November, 2020

டாலர் தேசம்

வந்தேறிகளின் தேசமான அமெரிக்காவிற்கு (USA) வந்தமர்ந்து பத்து வருடத்திற்கு மேலாகிறது ஆனால் இதுவரை இந்நாட்டைப்பற்றிய வரலாற்றை விரிவாக தெரிந்து கொண்டது இல்லை. சுற்றுலாவாசியாக வந்த என் அம்மா செவ்விந்தியர்களைப் பற்றி ஆர்வத்துடன் கேட்டாள். என் அப்பாவோ விர்ஜினியா புகையிலைப் பற்றியும் பாஸ்டன் தேநீர் விருந்தைப்பற்றியும் தான் அறிந்ததை பகிர்ந்து கொண்டார் ஆனால் இங்கு வந்திறங்கிய புதிதில் எனக்கு இது எதைப்பற்றியும் தெரிந்திருக்கவில்லை (என் வரலாற்றறிவு அப்பிடி!!!). அடுத்தடுத்து வந்த வருடங்களில் திரைப்படங்கள், டாக்குமெண்டரிகள் மூலமும் ஏதாவது சர்ச்சையான செய்திகள் வெளிவரும் பட்சத்தில் அதில் உள்ள வரலாற்று பின் புலத்தை கூகுள் செய்தும், எனது கணவரிடம் கேட்டும்  சிறிது சிறிதாக அறிந்து கொள்ளத் துவங்கினேன். வரலாற்றில் இடம் பிடித்த முக்கிய புள்ளிகளையும் சரித்திர நாயகர்களைப் பற்றியும் என் குழந்தைகள் படிக்கும் நூலக புத்தகங்கள் வாயிலாகவும் தெரிந்து கொள்ள வாய்ப்பு அமைந்தது. மிக சமீபத்தில் நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் பா. ராகவன் எழுதிய "டாலர் தேசம் - அமெரிக்காவின் அரசியல் வரலாறு" என்னும் புத்தகத்தை ...