Posts

Showing posts from October, 2021

Bell Bottom (Hindi)

 Ranjit.M.Tewari இயக்கத்தில் Akshay Kumar ஹீரோவாக நடித்து, உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு Amazon Prime-ல் வெளிவந்திருக்கும் திரைப்படம் "Bell Bottom". படத்தின் ட்ரைலரைப் பார்த்தாலே கதை எதை மையமாகக் கொண்டு நகரப் போகிறது என்பதை தெரிந்து கொண்டு விடலாம் எனினும் கதை பயணம் செய்யும் பாதை எவ்வளவு பரபரப்பாக விவரிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள முழுப்  படத்தை பார்க்க வேண்டியது அவசியமாகிறது. வரலாற்றுச்  சம்பவங்கள் அதிலும் கிட்டத்தட்ட 30-35 வருடத்திற்கு முன்  நடந்த நிகழ்வுகள் தான் படமாக்கப்பட்டிருக்கிறது என்பதால் இப்படத்தை காணும்  ஆர்வம் நம்மில் இயற்கையாகவே அதிகரிக்கிறது எனலாம். "படத்தின் துவக்கத்தில் கடத்தப்படும் விமானம் எவ்வாறு மீட்கப்படுகிறது? இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? தீவிரவாதிகள் பிடிபட்டார்களா? உயிர் சேதம் இருந்ததா? " என்பதை முடிந்த மட்டும் இயக்குனர் மிக விறு விறுப்பாகவே படமாக்கி இருக்கிறார். படத்தின் கடைசி அரை மணி நேரம் Super Fast. கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடக்கிறது  கவனமில்லாமல் படம் பார்த்தீர்களானால் Rewind செய்து பார்க்க வே...