Bell Bottom (Hindi)
Ranjit.M.Tewari இயக்கத்தில் Akshay Kumar ஹீரோவாக நடித்து, உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு Amazon Prime-ல் வெளிவந்திருக்கும் திரைப்படம் "Bell Bottom".
படத்தின் ட்ரைலரைப் பார்த்தாலே கதை எதை மையமாகக் கொண்டு நகரப் போகிறது என்பதை தெரிந்து கொண்டு விடலாம் எனினும் கதை பயணம் செய்யும் பாதை எவ்வளவு பரபரப்பாக விவரிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள முழுப் படத்தை பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
வரலாற்றுச் சம்பவங்கள் அதிலும் கிட்டத்தட்ட 30-35 வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வுகள் தான் படமாக்கப்பட்டிருக்கிறது என்பதால் இப்படத்தை காணும் ஆர்வம் நம்மில் இயற்கையாகவே அதிகரிக்கிறது எனலாம்.
"படத்தின் துவக்கத்தில் கடத்தப்படும் விமானம் எவ்வாறு மீட்கப்படுகிறது? இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? தீவிரவாதிகள் பிடிபட்டார்களா? உயிர் சேதம் இருந்ததா? " என்பதை முடிந்த மட்டும் இயக்குனர் மிக விறு விறுப்பாகவே படமாக்கி இருக்கிறார். படத்தின் கடைசி அரை மணி நேரம் Super Fast. கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடக்கிறது கவனமில்லாமல் படம் பார்த்தீர்களானால் Rewind செய்து பார்க்க வேண்டி இருக்கும் ஏனென்றால் அங்குதான் அனைத்து Puzzle-களையும் இயக்குனர் ஒன்று சேர்கிறார்.
விமானக் கடத்தல் திரைப்படம் என்றதும் ராதா மோகன் இயக்கத்தில் பத்து வருடஙகளுக்கு முன் வெளிவந்த "பயணம்" திரைப்படம் நினைவிற்கு வந்தது ஆனால் அதற்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் கிடையாது.
பயணிகளைப் பற்றி அடிக்கடி காட்டுவது, குழந்தைகளை கடத்தல்காரர்கள் கொடுமைப்படுத்துவது, கொல்வது போன்ற சமாசாரங்கள் அறவே தவிர்த்திருப்பது பாராட்டுக்குரியதாக இருந்தது. அக்ஷய் குமாரின் அம்மா கதாபாத்திரத்தை கொஞ்சம் Exaggerate செய்து விட்டார்களோ? என்று நினைத்த அதே வேளையில் அக்காட்சிகள் படத்தின் ஜீவ நாடிகளில் ஒன்றல்லவா என்றும் எண்ணத் தோன்றியது.
Fit ஆக இருந்தாலும் RAW Agent-ஆக வரும் அக்ஷய் குமாருக்கு வயதாகிவிட்டது நன்றாகத் தெரிகிறது. இந்திரா காந்தியாக வருவது யார் என்று Google உதவி இன்றி கண்டு பிடியுங்கள் பார்ப்போம். தலைவாசல் விஜய்க்கு நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது அவரும் வழக்கம் போல் சற்று ஓவர் ஆக்டிங் உடன் நன்றாகவே நடித்திருக்கிறார்.
எழுபதுகளின் இறுதியில் துவங்கி எண்பதுகளில் பயணிக்கும் படம் ஆனால் அதற்கேற்றாற் போல் எந்த outlook-ம் பெரிதாக கொடுக்கப்படவில்லை. என் கண்களுக்கு அப்பட்டமாக தெரிந்தது ஹீரோயின் வாணி கபூரின் மேக்கப், உடைகள் மற்றும் ஹேர் ஸ்டைல். 2021-ல் தான் அவர் இருக்கிறார்! என்னுடன் படம் பார்த்த என் கணவர் பல்வேறு விஷயங்களை இந்த கோணத்தில் சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தார்.
அக்காலகட்டத்தில் இந்திய அரசியல் நிலை மற்றும் அண்டை நாடுகளுடன் அவர்களுக்கு எம்மாதிரியான உறவு இருந்தது முக்கியமாக சீக்கியர்களின் தனி நாடு கோரிக்கை எந்த அளவிற்கு தீவிரமாக இருந்திருக்கிறது என்பதை எல்லாம் இப்படத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு . படம் பார்த்த பின் உங்களின் தேசப்பற்று ஒரு ounce ஆவது நிச்சயம் கூடும்
இன்றைய குழந்தைகள் கூறுவது போல சில காட்சிகள் "Cringe" ஆக இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம் படம் தான் "Bell Bottom".
Comments
Post a Comment