Posts

Showing posts from November, 2021

Parasite - Korean Movie

 2019- ஆம் ஆண்டு வெளிவந்து பல்வேறு விருதுகளை (ஆஸ்கார் உட்பட) வென்றெடுத்த "Parasite" திரைப்படத்தை இப்பொழுதுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வேலையில்லா திண்டாட்டத்தால் அவதியுறும் Kim குடும்பம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களாக கீழ்தளத்தில் (Basement) வாழ்கின்றனர். மேல்தட்டு குடும்பமான Park குடும்பத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு எதிர்பாராமல் கிடைக்க Kim குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொருவராக திட்டமிட்டு  எவ்வாறு அங்கே உள் நுழைகிறார்கள் என்பதும் அதன் விளைவு என்னவாக இருந்தது என்பதும்தான் "Parasite" படத்தின் கதை. எனக்கு தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு தமிழ் படத்தைப் பார்ப்பது போலத்தான் இருந்தது. கடும் மழையால் வீட்டிற்குள் வெள்ளம் புகுவது, Fraud தனம் செய்யும் தனது குழந்தைகளை பெருமையோடு பார்க்கும் பெற்றோர்கள், எதிர்பாரா சூழ்நிலையில் சமயோஜித புத்தியை பயன்படுத்தாமல்  அவசரப்பட்டு அவர்கள் எடுக்கும் முடிவுகள், வசதி படைத்தவர்கள் ஏழைகளை பார்க்கும் பார்வை, அவர்களுக்கென்று ஒரு வாசனை உண்டு என்று அருவெறுப்புடன் கூறுவது, பணத்தை வைத்து அவர்களை விலைக்கு வாங்கி விடலாம் என்ற நினைப...