பாவக் கதைகள் - பார்க்கலாமா?
பொதுவாகவே வன்முறைக் காட்சிகள், எமோஷனல் காட்சிகளால் நிரப்பப்பட்டிருக்கும் திரைப்படங்கள், Psychological திரில்லர் என்று சொல்லக்கூடிய மர்மப் படங்கள் குறிப்பாக குழந்தைகளை கடத்தி வைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களை சமீபகாலமாக நாங்கள் தவிர்த்து விடுவதுண்டு. மேற்கூறிய காரணங்களுக்காகவே நான் பார்க்காமல் Choice-ல் விட்ட திரைப்படங்களில் ஒன்று 2020 டிசம்பரில் வெளிவந்த "பாவக் கதைகள்". "நான்கு குறும்படங்களில் ஒன்று கூட நம் ரசனைக்கு ஒத்து வராது போலவே? " என்று ட்ரைலரை பார்த்து முடிவு செய்து விட்டிருந்தேன் ஆனால் ஏதோ காரணத்திற்காக நேற்று தைரியமாக படத்தைப் பார்த்து விட்டேன். சுதா கோங்குரா, சந்தோஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றி மாறன் என்று நான்கு நட்சத்திர இயக்குனர்கள் இயக்கிய திரைப்படங்களின் தொகுப்பு "பாவக் கதைகள்". இதில் மூன்றாவதாக வரும் "வான்மகள்" கதைக்குள் மட்டுமே நம்மால் ஓட்ட முடிகிறது. இதில் கௌதம் மேனனும் சிம்ரனும் நன்றாக நடித்திருந்தாலும் கதை பயணிக்கும் சூழலோடு அவர்களை இணைத்துப் பார்க்க முடியவில்லை. சற்று அந்நியமாகவே பட்டர்...