பாவக் கதைகள் - பார்க்கலாமா?
பொதுவாகவே வன்முறைக் காட்சிகள், எமோஷனல் காட்சிகளால் நிரப்பப்பட்டிருக்கும் திரைப்படங்கள், Psychological திரில்லர் என்று சொல்லக்கூடிய மர்மப் படங்கள் குறிப்பாக குழந்தைகளை கடத்தி வைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களை சமீபகாலமாக நாங்கள் தவிர்த்து விடுவதுண்டு.
மேற்கூறிய காரணங்களுக்காகவே நான் பார்க்காமல் Choice-ல் விட்ட திரைப்படங்களில் ஒன்று 2020 டிசம்பரில் வெளிவந்த "பாவக் கதைகள்".
"நான்கு குறும்படங்களில் ஒன்று கூட நம் ரசனைக்கு ஒத்து வராது போலவே? " என்று ட்ரைலரை பார்த்து முடிவு செய்து விட்டிருந்தேன் ஆனால் ஏதோ காரணத்திற்காக நேற்று தைரியமாக படத்தைப் பார்த்து விட்டேன்.
சுதா கோங்குரா, சந்தோஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றி மாறன் என்று நான்கு நட்சத்திர இயக்குனர்கள் இயக்கிய திரைப்படங்களின் தொகுப்பு "பாவக் கதைகள்".
இதில் மூன்றாவதாக வரும் "வான்மகள்" கதைக்குள் மட்டுமே நம்மால் ஓட்ட முடிகிறது. இதில் கௌதம் மேனனும் சிம்ரனும் நன்றாக நடித்திருந்தாலும் கதை பயணிக்கும் சூழலோடு அவர்களை இணைத்துப் பார்க்க முடியவில்லை. சற்று அந்நியமாகவே பட்டர்கள்.
அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பது, தனியாளாக சென்று நான்கு பேரை அடித்து விட்டு வருவது, பன்ச் டயலாக் பேசுவது எல்லாம் திரைப்படங்களில் மட்டும் தான் நடக்கும் ரியாலிட்டி இல் ஏதும் செய்ய இயலாது என்று நாம் சொல்லிக் கொண்டாலும் நமக்கு ஏற்படும் அவதூறுகளுக்கும் அநீதிகளுக்கும் நாம் எதிர்வினை ஆற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். எப்படி என்று எண்ணிப்பார்த்தால் சிலவற்றில் நாம் நம்மை திருத்திக் கொள்கிறோம் சில விஷயங்களில் குறிப்பிட்ட நபரிடம் விவாதித்து நமக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தைக் கோருகிறோம். At Least நான்கு பேரிடம் அதைப் பற்றி பேசிப் பேசியாவது நம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறோம்.
நமக்கு ஒரு அநியாயம் நடந்து விட்டது ஆனால் அதை செய்தது யார் என்று தெரியவில்லை, அடுத்த நபரிடம் அதை பகிர்ந்தும் கொள்ள முடியாது, நமது கஷ்டத்திற்கு காரணமானவர்களை கண்டறியவும் முடியாது என்றால் நம் மனதில் ஏற்படும் Trauma - வை நம்மால் சகித்துக் கொள்ளவே முடியாது குறிப்பாக இவை நம் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் நம் மனம் என்ன பாடுபடும். எப்படிக் கிடந்தது அலறும் என்பதை "வான் மகள்" திரைப்படத்தில் மிக அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன்.
படத்தில் காட்டப்படும் சம்பவங்கள் நமக்கு நிகழும் வாய்ப்பு மிகக் குறைவே எனினும் நடந்து விட்டால்? என்ற கேள்வியை நம்மில் ஆழமாக பதித்து விட்டுச் செல்கிறது வான் மகள் குறும் படம்.
பாவக் கதைகள் Anthology இன் Positive விஷயம் என்னவென்றால் நாம் அனைவரும் பார்க்காமல் தவிர்க்க நினைக்கும் காட்சிகள் நான்கு படங்களிலுமே வருகின்றன ஆனால் அந்த உச்ச காட்சிகளை மிக மிக அழகாக நமக்கு கட்டாமலேயே தவிர்த்து இருந்தது பாராட்டுக்குரியதாகவே பட்டது.
அனைத்து நடிகர்களின் நடிப்பும் அருமை குறிப்பாக காளி தாஸ் ஜெயராமன்.
உங்கள் எண்ணங்களையும் கமெண்டில் பதிவிடுங்களேன்!!!
Comments
Post a Comment