சுழல் - The Vortex
கடந்த வருடம் அமேசான் Prime - ல் வெளிவந்த குறுந்தொடர்களில் ஒன்று 'சுழல் - The Vortex". பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், இளங்கோ என்று நடிகர் பட்டாளங்களை முன்னிறுத்தி "புஷ்கர்- காயத்ரி" எழுதிய கதையை "பிரம்மா- அனுசரண் முருகையன்" இயக்கியிருக்கிறார்கள். சாம்பலுர் என்னும் கிராமத்தில் ஒரே ஒரு சிமெண்ட் தொழிற்சாலை தான் அனைவரின் வாழ்வாதாரம். அங்கு தொழிலார்களுக்கும் முதலாளிக்கும் இடையே பிரச்சனை..தலைமை தாங்கி போராட்டத்தை நடத்துகிறார் யூனியன் தலைவர் ஷண்முகம் (பார்த்திபன்). அந்த ஊரின் காவல்துறை (ஸ்ரேயா மற்றும் கதிர்) பண முதலைகளின் பக்கம் நிற்கிறது. சாம்பாலூரில் மயான கொள்ளை திருவிழா தொடங்குகிறது. அதே நாளில் தொழிற்சாலையில் தீ பிடிக்கிறது. இந்த களேபரங்களுக்கு இடையே சண்முகத்தின் மகள் நிலா காணாமல் போகிறாள். மேல்கூறிய பிரச்சனைகளில் சுழலை ஒவ்வொன்றாக களைந்து சீர்படுத்துகிறார்கள் 8-வது எபிசோடில் முடிவில். நிலா கடத்தப்பட்டிருக்கிறாள் என்று கதிர் கண்டறிவதும் அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தது. திடீரென்று நிலாவின் பிணம் ஏரியில் ...