வெண்முரசு - மகாபாரதம் நாவல் வடிவில் - எழுத்தாளர் ஜெயமோகன்
இதிகாசமான மகாபாரத்தை பற்றி அறியாதவர்கள் பரந்துபட்ட இந்த பாரத தேசத்தில் எவரும் இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். இதன் ஒரு வரி சாராம்சம் பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். விரிவான கதையை புத்தகங்கள் மூலமும் என்னைப் போன்றோர் தூர்தர்ஷன் தொடர் மூலமும் இன்றைய தலைமுறையினர் விஜய் டீவி தொடர் வழியாகவும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். மகாபாரதம் என்பதே பல்வேறு கிளைக்கதைகளும் வேறுபட்ட கதைமாந்தர்களும் அடங்கிய கருவூலம் என்று பலர் கூறி கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இன்று எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 26 புத்தகங்கள் அடங்கிய 25,000 பக்கங்கங்களை வாசித்து முடித்துவிட்ட நிலையில் அதை முழுமையாக ஏற்கிறேன். உலகிலேயே மிகப் பெரிய நாவல் வரிசை என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இத்தொடரை முடிக்க 8 வருடங்கள் தேவைப்பட்டது எனக்கு!!! (தொடர்ச்சியாக வாசித்திருந்தால் விரைவில் முடித்திருந்திருக்கலாம் ) 2014-ம் வருடம் இவ்வரிசையின் முதல் புத்தகமான "முதற்கனல்" வெளிவந்ததுமே எனது கணவர் வாங்கி விட்டார் எனினும் நான் அதற்கு அடுத்த வருடமே அதைக் கையில் எடுக்கத் துணிந்தேன் ஏனென்றால் மிக எளிய நடையில் எழுதப்பட்ட ...