Posts

Showing posts from April, 2024

Premalu (Malayalam)

Image
 "Manjummel Boys" OTT-ல் வெளிவருமா? வராதா? என்ற விவாதம் ஒரு புறமிருக்க இதோ அதோ என்று ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த "Premalu" டிஸ்னி ஹாட்ஸ்டார்-ல் ஒருவழியாக காணக்கிடைக்கிறது. மொக்க மலையாளப் படங்களையே விடாமல் பார்க்கும் எனக்கு சொல்லவா வேண்டும் அது மட்டுமில்லாமல் பல்வேறு படங்களில் Supporting ரோலில் வந்து விட்டு இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் Naslen. யதார்த்தமான நடிப்பா அல்லது பக்கத்து வீட்டு தம்பி போன்ற பாவமான தோற்றமா? என்னவென்று தெரியவில்லை பிடிக்கும்!! வழக்கமான மலையாள திரைப்படங்களைப் போல இதிலும் கதை என்ற  ஒன்று பெரிதாக இல்லை. ஒன்றுக்கும் உதவாத ஹீரோ காதலில் விழும் "Premam" "Hridayam" படங்களை நினைவுபடுத்தும் கதை தான் ஆனால் ஒரு காலகட்டத்தில் மட்டும் நடந்து முடிந்து "Autograph" Feel இல்லாமல் நம்மை காப்பாற்றுகிறது. படத்திற்கு பெரிய Plus Point ஏ அங்கங்கே Chat Masala போல தூவப்பற்றிருக்கும் நகைச்சுவை. கலகல வென்று சிரிக்கவில்லை என்றாலும் படம் முழுக்க ஒரு புன் முறுவல் உங்கள் முகத்தில் தவழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கும். Amal Davis ஆக வரும் சங்கீத...