Premalu (Malayalam)

 "Manjummel Boys" OTT-ல் வெளிவருமா? வராதா? என்ற விவாதம் ஒரு புறமிருக்க இதோ அதோ என்று ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த "Premalu" டிஸ்னி ஹாட்ஸ்டார்-ல் ஒருவழியாக காணக்கிடைக்கிறது.




மொக்க மலையாளப் படங்களையே விடாமல் பார்க்கும் எனக்கு சொல்லவா வேண்டும் அது மட்டுமில்லாமல் பல்வேறு படங்களில் Supporting ரோலில் வந்து விட்டு இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் Naslen. யதார்த்தமான நடிப்பா அல்லது பக்கத்து வீட்டு தம்பி போன்ற பாவமான தோற்றமா? என்னவென்று தெரியவில்லை பிடிக்கும்!!

வழக்கமான மலையாள திரைப்படங்களைப் போல இதிலும் கதை என்ற  ஒன்று பெரிதாக இல்லை. ஒன்றுக்கும் உதவாத ஹீரோ காதலில் விழும் "Premam" "Hridayam" படங்களை நினைவுபடுத்தும் கதை தான் ஆனால் ஒரு காலகட்டத்தில் மட்டும் நடந்து முடிந்து "Autograph" Feel இல்லாமல் நம்மை காப்பாற்றுகிறது.

படத்திற்கு பெரிய Plus Point ஏ அங்கங்கே Chat Masala போல தூவப்பற்றிருக்கும் நகைச்சுவை. கலகல வென்று சிரிக்கவில்லை என்றாலும் படம் முழுக்க ஒரு புன் முறுவல் உங்கள் முகத்தில் தவழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கும்.

Amal Davis ஆக வரும் சங்கீத் பிரதாப் Aadhi ஆக வரும் ஷியாம் மோகன் Cameo ரோலில் Mathew Thomas என்று அட்டகாசமான Casting மற்றும் அவர்களின் அலட்டல் இல்லாத எதார்த்தமான நடிப்பு.

ஹீரோயின் Mamitha Baiju காதலில் விழுந்தேன் புகழ் "சுனைனா"-வை நினைவு படுத்துகிறார்.

படத்திற்கு நெகட்டிவ் என்றால் ஒரே மாதிரியான காட்சி அமைப்புகளையும் ஒரே இடத்தில லாடம் அடித்து நிற்கும் திரைக்கதையையும் சொல்லலாம்.

நேரம் கிடைக்கும் போது பாருங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள். பிடிக்கவில்லை என்று சொல்லிப் பாருங்கள் "உங்களுக்கு வயசாயிடுச்சு" என்று நம்மை கலாய்த்து விடுவார்கள்.

பின் குறிப்பு - கதாநாயகி மற்றும் கதாநாயகனுக்கு இடையே Chemistry அந்த அளவிற்கு Work Out ஆகவில்லையோ? அக்கா போல இருந்ததாக ஒரு feel!!


Comments

  1. Haha, nice one..agree that u will be smiling through the entire movie. I think a big chunk revolved around the Aadhi character. I love the Amal Davis character too and how he prepares for Gate exam and his friend works in TFC. Last line on Mamtha being a sister, haha, i didnt feel like that and couldnt take her as a girl friend either. While the Tamil Lover movie kept me serious and melancholic, this was such a light hearted comedy movie. I definitely like the subtle comedy the entire movie carried through.

    ReplyDelete
    Replies
    1. Yet to watch Manikandan's Lover movie :)

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா