மகாராஜா
திரில்லர் படங்கள் இரண்டு விதம். முதல் வகை - தட்டில் கவிழ்த்த நூடுல்ஸ் போல பல்வேறு கதாபாத்திரங்கள் பிண்ணி பிணைந்து ஒரே நிகழ்வை நோக்கிச் செல்லும் அனைவருமே சம்பவத்தில் சம்மந்தப் பட்டவர்களாகவே தோன்றுவார்கள். இரண்டாம் விதம் - நால்வழி சாலையில் செல்லும் வாகனங்களைப் போல ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல்வேறு கேரக்டர்-களை இயக்குனர் அறிமுகப்படுத்திக் கொண்டே செல்வார் அவர்களுள் யார் குற்றவாளி என்று படம் செல்லச் செல்ல புலப்படும். மஹாராஜா இதில் இரண்டாவது ரகம். பற்றாக்குறைக்கு Non - Linear முறையில் கதை சொல்கிறேன் பேர்வழி என்று அதீத குழப்பம் நமக்குத் தான். இன்றைய தேதியில் பெரும்பாலோனோருக்கு படத்தின் கதை தெரிந்திருக்கும் எனினும் Spoiler இல்லாமல் எழுதுகிறேன். படம் தொடங்கி தனது வழக்கமான பாணியில் நடிக்கும் விஜய் சேதுபதியைப் பார்க்கும் போது சற்று Cringe ஆகத்தான் இருந்தது ஆனால் அதுதான் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாய்ண்ட் ஏனென்றால் அடுத்த என்ன வரும் என்ற நமது யூகத்திற்கு அது மிகப்பெரிய தடையாக இருந்து படத்தின் சஸ்பென்ஸை தக்க வைக்க உதவுகிறது. முன்னும் பின்னுமாக நகரும் கதையும் screenplay-ல் ...