மகாராஜா
திரில்லர் படங்கள் இரண்டு விதம்.
முதல் வகை - தட்டில் கவிழ்த்த நூடுல்ஸ் போல பல்வேறு கதாபாத்திரங்கள் பிண்ணி பிணைந்து ஒரே நிகழ்வை நோக்கிச் செல்லும் அனைவருமே சம்பவத்தில் சம்மந்தப் பட்டவர்களாகவே தோன்றுவார்கள்.
இரண்டாம் விதம் - நால்வழி சாலையில் செல்லும் வாகனங்களைப் போல ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல்வேறு கேரக்டர்-களை இயக்குனர் அறிமுகப்படுத்திக் கொண்டே செல்வார் அவர்களுள் யார் குற்றவாளி என்று படம் செல்லச் செல்ல புலப்படும். மஹாராஜா இதில் இரண்டாவது ரகம். பற்றாக்குறைக்கு Non - Linear முறையில் கதை சொல்கிறேன் பேர்வழி என்று அதீத குழப்பம் நமக்குத் தான்.
இன்றைய தேதியில் பெரும்பாலோனோருக்கு படத்தின் கதை தெரிந்திருக்கும் எனினும் Spoiler இல்லாமல் எழுதுகிறேன்.
படம் தொடங்கி தனது வழக்கமான பாணியில் நடிக்கும் விஜய் சேதுபதியைப் பார்க்கும் போது சற்று Cringe ஆகத்தான் இருந்தது ஆனால் அதுதான் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாய்ண்ட் ஏனென்றால் அடுத்த என்ன வரும் என்ற நமது யூகத்திற்கு அது மிகப்பெரிய தடையாக இருந்து படத்தின் சஸ்பென்ஸை தக்க வைக்க உதவுகிறது.
முன்னும் பின்னுமாக நகரும் கதையும் screenplay-ல் லக்ஷ்மி காட்டப்படும் இடங்களும் சுவாரஸ்யத்தை மட்டுமல்லாது நமது எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்திய வண்ணம் செல்கிறது.
கொடூரமான வில்லனாக Anurag Kashyap அதிக வசனங்கள் பேசாமலேயே அனாசயமாக நடிப்பில் மிரட்டுகிறார்.
போலீஸ் அதிகாரிகளாக வரும் அனைவரும் Natty நடராஜன் உட்பட நாம் எதிர்பாரா திருப்பத்தை இறுதியில் வழங்கி நம்மை ஆசுவாச படுத்துகிறார்கள்.
VJS -யின் மகளாக வருபவர், அபிராமி, மம்தா மோகன்தாஸ் என அனைவரும் தங்களின் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கின்றனர்.
இயக்குனர் பாரதிராஜா எதற்கு என்று தெரியவில்லை. குரங்கு பொம்மை செண்டிமெண்டிற்கா?! இயக்குனர் நிதிலனுக்கே வெளிச்சம்.
சிங்கம் புலியை அனைத்து ஊடகங்களுமே புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறது அவரின் நடிப்பைப் பற்றி நான் வேறு என்ன தனியாகக் கூறுவது!!!
இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓடும் இத்திரைப்படத்தின் Extreme Violent காட்சிகளை பார்த்த நமக்கு இயக்குனர் திரைக்கதையை நகர்த்தும் விதத்தில் மூலமும் positive கிளைமாக்ஸ் மூலமும் திருப்தியையும் ஏன் இப்படத்தை பார்க்கலாம் என்ற காரணத்தையும் வழங்கி நம்முடைய பாராட்டையும் பெற்றுச் செல்கிறார்.
Netflix-ல் காணக்கிடைக்கும் இப்படத்தை மதிய வேளையில் பாருங்கள். ஏற்கனவே பார்த்திருந்தால் உங்களின் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
பின் குறிப்பு - இரண்டாம் பாதியில் VJS- ன் நடிப்பு சூப்பர்!!!
Comments
Post a Comment