விடுதலை 1 & 2

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், கௌதம் மேனன், ராஜீவ் மேனன். இளவரசு மற்றும் பல்வேறு அபிமான நட்சத்திங்களின் நடித்து இளையராஜா இசையில் 2023-ம் ஆண்டில் விடுதலை பாகம் ஒன்று வெளியானது. "வழி நெடுக காட்டு மல்லி" என்று இளையராஜாவின் குரலில் வந்த பாடல் தாறுமாறாக ட்ரெண்டிங் ஆனதில் அனைவருக்கும் இப்படம் அறிமுகமானது. தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகம் 2024 டிசெம்பரில் வெளிவர இவ்விரு பாகங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக Amazon Prime-ல் சமீபத்தில் பார்த்தேன் அதன் விளைவே இந்த விமர்சனம்! விடுதலை 1 மலைக்கிராமத்தில் போலீஸ் டிபார்ட்மெண்டில் ஜீப் Driver ஆக வேலை கிடைக்கப்பெற்று அங்கு வரும் சூரி-யின் குரல் வழியே 80-களில் கதை பயணிக்கிறது. மக்கள் படை என்ற இயக்கம் தீவிரவாத இயக்கமாக அரசால் முத்திரை குத்தப்பட்டு அதன் தலைவரான வாத்தியார் என்னும் பெருமாளை காவல் துறை முகாம் அமைத்து தீவிரமாக தேடி வருகிறது. சமீபத்தில் நடந்த ரயில் குண்டுவெடிப்பு அவர்களின் கைவண்ணமே என்று கண்டறியப்பட்டு அவ்வியக்கத்தை ஒடுக்கிய ஆக வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு அரசால் தள்ளப்பட்ட காவல் துறை தங்களு...