Posts

Showing posts from June, 2025

Stolen - Hindi Movie

Image
சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளி வந்த திரைப்படம் "Stolen".   இத்திரைப்படத்திற்கு நல்ல ரேட்டிங் இருந்ததாலும் சமூக வலைத்தளங்களிலும் இதைப்பற்றிய சலசலப்பு சற்று அதிகமாக இருந்ததாலும் சரி பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். நடு இரவில் ரயில்வே பெஞ்சில் உறங்கிக் கொண்டிருக்கும் "Jhumpa" வின் 5 மாத பெண் குழந்தை  களவு போகிறது. அவ்விடத்தில் எதிர்பாரா விதமாக மாட்டிக்கொள்ளும் இரு சகோதரர்கள் காவல்துறையை நம்பாமல் எவ்வாறு குழந்தையை மீட்டெடுக்க உதவுகிறார்கள்?!  இதற்கிடையில் குழந்தையை பறிகொடுத்தவளைப் பற்றி போலீசார் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையா?!  ஒரு விஷயத்தை நன்கு அறிந்து கொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் அதைப்பார்த்த இளைஞர்கள் உடனேயே குற்றவாளிகளை தண்டிக்கும் நீதிமான்களாக மாறுவதும் அதனால்  ஏற்படும் விபரீதங்கள் என்னென்ன என்றும் இந்த ஒன்றரை மணி நேர திரைப்படத்தில் மிக நேர்த்தியாகக் கூறியிருக்கிறார் இயக்குனர் கரண் தேஜ்பால். "Stree" படத்தில் நடித்த அபிஷேக் பானெர்ஜிக்கு இதில் மிக வித்தியாசமான கதாபாத்திரம். அவர் தம்பியாக வருபவர், காவல் அதிகாரி என்று விரல் விட்டு எண்ணக்கூ...