Stolen - Hindi Movie

சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளி வந்த திரைப்படம் "Stolen".  

இத்திரைப்படத்திற்கு நல்ல ரேட்டிங் இருந்ததாலும் சமூக வலைத்தளங்களிலும் இதைப்பற்றிய சலசலப்பு சற்று அதிகமாக இருந்ததாலும் சரி பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன்.

நடு இரவில் ரயில்வே பெஞ்சில் உறங்கிக் கொண்டிருக்கும் "Jhumpa" வின் 5 மாத பெண் குழந்தை  களவு போகிறது. அவ்விடத்தில் எதிர்பாரா விதமாக மாட்டிக்கொள்ளும் இரு சகோதரர்கள் காவல்துறையை நம்பாமல் எவ்வாறு குழந்தையை மீட்டெடுக்க உதவுகிறார்கள்?! 

இதற்கிடையில் குழந்தையை பறிகொடுத்தவளைப் பற்றி போலீசார் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையா?! 

ஒரு விஷயத்தை நன்கு அறிந்து கொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் அதைப்பார்த்த இளைஞர்கள் உடனேயே குற்றவாளிகளை தண்டிக்கும் நீதிமான்களாக மாறுவதும் அதனால்  ஏற்படும் விபரீதங்கள் என்னென்ன என்றும் இந்த ஒன்றரை மணி நேர திரைப்படத்தில் மிக நேர்த்தியாகக் கூறியிருக்கிறார் இயக்குனர் கரண் தேஜ்பால்.


"Stree" படத்தில் நடித்த அபிஷேக் பானெர்ஜிக்கு இதில் மிக வித்தியாசமான கதாபாத்திரம். அவர் தம்பியாக வருபவர், காவல் அதிகாரி என்று விரல் விட்டு எண்ணக்கூடிய கதை மாந்தர்களைக் கொண்டு impressive ஆன கதையை கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் First Half இரவின் இருட்டிலும் மறு பாதி அதிகாலை முதல் நன் பகல் வரை என ஒளிப்பதிவை அழகாக கையாண்டிருக்கிறார்கள்.

மேற்கூறியவற்றை படித்த உங்களின் பெரும்பாலானோரின் மனதில் தோன்றும் சந்தேகத்தை தீர்த்து விடுகிறேன்.

படத்தில் எமோஷனல் அழுகைக் காட்சிகள் அதிகமா? - இல்லை 

வன்முறைக்காட்சிகள் உண்டா? - உண்டு ஆனால் தேவையான அளவே.

மகாநதியில் கமல் தன் மகளைத் தேடி அலைவது போல் இருக்குமோ?! - கண்டிப்பாக இல்லை.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நகைச்சுவை, காதல், பாடல் என்று Diversion இல்லாமல் யாரும் ஹீரோயிசம் செய்யாமல் சினிமாத்தனத்தை சரியான விகிதத்தில் கலந்து - ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் இத்திரைப்படத்தை கட்டாயம் ஒரு முறை பார்க்கலாம், இயக்குனர் நாம் எதிர்பாரா "Twist" ஒன்றை வைத்திருக்கிறார்!

பின் குறிப்பு - இத்திரைப்படம் எனக்கு "Lapattaa Ladies" ஐ நினைவு படுத்தியது ஏன் என்று தெரியவில்லை 😉

Comments

Popular posts from this blog

மகாராஜா

மெய்யழகன் Vs லப்பர் பந்து