Posts

Showing posts from July, 2025

குபேரா

Image
தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா நடிப்பில் தெலுங்கு பட குழுவினரால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரு சேர எடுக்கப்பட்டு  வெளி வந்திருக்கும் திரைப்பாடம் "குபேரா". வழக்கமான பாணியில் வில்லன் அரசியல் வாதி டீல் பேசும் காட்சியோடு தொடங்கும் இப்படம் தனுஷ் வரும் வரை அதே பாதையில பயணிக்கிறது. அதன் பின் நாம் யூகிக்கும் காட்சிகளோடும் கதையோடும் திரைப்படம் நகர்கிறது வழக்கத்தை விட மிக மெதுவாகவே! கிட்டத்தட்ட இடைவேளைக்கு மிக அருகில் கதை வரும் வேளையில் என்ட்ரி கொடுக்கிறார் கதாநாயகி இல்லை இல்லை மறுமொரு கதாபாத்திரமான ராஷ்மிகா..அங்கிருந்து கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. இயக்குனரும் இஷ்டத்திற்கு "Cinematic Liberty" ஐ காட்சி அமைப்பில்  கையாள்கிறார் இருப்பினும் படம் வித்தியாசமான பாதையிலேயே பயணித்து முடிகிறது. அசுரன், ராயன், கர்ணன் போன்ற படங்களில் நாம் பார்த்த தனுஷிற்கு சற்றும் பொருந்தாத கதாபாத்திரத்தை ஏற்று அதை மிகச் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார் தனுஷ். இவர் எப்போ ஹீரோவா மாறுவர் என்று வன்முறை பிடிக்காத என்னைப் போன்றவரையே யோசிக்க செய்து விட்டார். சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஆனால் நாகர்ஜூனாவ...