குபேரா
தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா நடிப்பில் தெலுங்கு பட குழுவினரால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரு சேர எடுக்கப்பட்டு வெளி வந்திருக்கும் திரைப்பாடம் "குபேரா".
வழக்கமான பாணியில் வில்லன் அரசியல் வாதி டீல் பேசும் காட்சியோடு தொடங்கும் இப்படம் தனுஷ் வரும் வரை அதே பாதையில பயணிக்கிறது. அதன் பின் நாம் யூகிக்கும் காட்சிகளோடும் கதையோடும் திரைப்படம் நகர்கிறது வழக்கத்தை விட மிக மெதுவாகவே!
கிட்டத்தட்ட இடைவேளைக்கு மிக அருகில் கதை வரும் வேளையில் என்ட்ரி கொடுக்கிறார் கதாநாயகி இல்லை இல்லை மறுமொரு கதாபாத்திரமான ராஷ்மிகா..அங்கிருந்து கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. இயக்குனரும் இஷ்டத்திற்கு "Cinematic Liberty" ஐ காட்சி அமைப்பில் கையாள்கிறார் இருப்பினும் படம் வித்தியாசமான பாதையிலேயே பயணித்து முடிகிறது.
அசுரன், ராயன், கர்ணன் போன்ற படங்களில் நாம் பார்த்த தனுஷிற்கு சற்றும் பொருந்தாத கதாபாத்திரத்தை ஏற்று அதை மிகச் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார் தனுஷ். இவர் எப்போ ஹீரோவா மாறுவர் என்று வன்முறை பிடிக்காத என்னைப் போன்றவரையே யோசிக்க செய்து விட்டார்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஆனால் நாகர்ஜூனாவிற்குத்தான் சண்டை காட்சிகள் படத்தில். அவருடைய கதாபாத்திரம் 100% நாம் எண்ணியவிதமே இருந்தது என்று கூறமுடியாது அதிலும் Different Shades ஐ இயக்குனர் கொண்டு வந்த விதம் அருமை.
ராஷ்மிகாவின் கதாபாத்திரமும் நன்றாகவே கதையோடு இணைந்து பயணித்தது ரசிக்கும் விதம் இருந்தது.
இயக்குனர் சேகர் கம்முலா ஒரு நடிகரையும் வீணடிக்கவில்லை. ஒரு நடிகர் வருகிறார் என்றால் அவர் எவ்வகையிலாவது கதையினை முன்னகர்த்தி செல்கிறார் அடியாள் உட்பட.
நெடுநாட்களுக்குப் பிறகு Caricature ஆக மாட்டும் இல்லாமல் வில்லன் பாத்திரத்திற்கும் சற்று முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
படத்தில் காமெடி இல்லை, தேவையற்ற பாடல், காதல் காட்சிகள் இல்லை. வன்முறை உண்டு.
வந்த காட்சிகளே Loop ல் வருவது போன்று வரும் ராஷ்மிகா-தனுஷ் - நாகார்ஜூனா காட்சிகளை தவிர்த்திருக்கலாம் .
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரனை அடுத்து குபேரன் பிச்சை எடுத்து வாழும் இம்மக்களின் வாழ்க்கையை பரிவோடு விவரிக்கிறது எனினும் அவர்கள் நடைமுறை எதார்த்தங்களைப் பற்றி (போன் பயன்பாடு, பண மதிப்பு) அறியாதவர்களாகக் காட்டியிருந்தது நம்புவதற்கு சற்று கடினமாகத் தான் இருந்தது.
மிக மெதுவாக நகரும் இப்படம் பார்ட் 2 இருக்கும் போல என்ற எதிர்பார்ப்பையும் எண்ணத்தையும் நம்முள் புகுத்திவிட்டு Abrupt ஆக முடிந்து விடுகிறது.
Prime -ல் காணக்கிடைக்கும் குபேரனை கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்!!

Comments
Post a Comment