பின் தொடரும் தொடர்கள்..
2021-ம் ஆண்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. கொரோனாவிற்கு தடுப்பு ஊசி கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த ஆண்டு நமது எதிர்பார்ப்பை ஓரளவிற்கு பூர்த்தி செய்தது எனினும் பழைய நிலைக்கு முற்றிலும் நம்மை அழைத்து சென்று விட்டது என்று கூறுவதற்கு இல்லை. வருட முடிவில் பெரும்பாலானோர் கேட்கும் அல்லது எண்ணிப்பார்க்கும் விஷயம் இந்த வருடம் புதிதாக என்ன செய்தோம்? அல்லது பயனுள்ளதாக என்ன செய்தோம்? என்பதாகத்தான் இருக்கும். நான் புதிதாக "எங்கள் Original "என்று Streaming Service-கள் மார்தட்டிக் கொள்ளும் Web-Series-களை பார்க்கத் துவங்கி இருக்கிறேன். கொரோனாவினால் திரையரங்கங்களில் மக்கள் வருகை மட்டுப்பட்டு இருப்பதால் ஹாலிவுட் மெகா பட்ஜெட் படங்கள் எல்லாம் இந்த ஆண்டு துவக்கத்தில் எதுவும் வெளி வரவில்லை அதனால் அதிலிருக்கும் முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்டு "Limited Series" வெளிவந்தது. டிஸ்னி Plus-ல் மட்டும் Wanda Vision, Loki, What If (animation) என்று பல தொடர்கள். அதில் Wanda Vision தொடரை தெரிவு செய்து பார்த்தோம். தொடக்கத்தில் சற்று தொய்வு தோன்றினாலும் ஒட்டு மொத்த...