பின் தொடரும் தொடர்கள்..

2021-ம் ஆண்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. கொரோனாவிற்கு தடுப்பு ஊசி கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த ஆண்டு நமது எதிர்பார்ப்பை ஓரளவிற்கு பூர்த்தி செய்தது எனினும் பழைய நிலைக்கு முற்றிலும் நம்மை அழைத்து சென்று விட்டது என்று கூறுவதற்கு இல்லை.

வருட முடிவில் பெரும்பாலானோர்  கேட்கும் அல்லது எண்ணிப்பார்க்கும் விஷயம் இந்த வருடம் புதிதாக என்ன செய்தோம்? அல்லது பயனுள்ளதாக என்ன செய்தோம்? என்பதாகத்தான் இருக்கும்.

நான் புதிதாக "எங்கள் Original "என்று Streaming Service-கள் மார்தட்டிக் கொள்ளும் Web-Series-களை பார்க்கத் துவங்கி இருக்கிறேன். கொரோனாவினால் திரையரங்கங்களில் மக்கள் வருகை மட்டுப்பட்டு இருப்பதால் ஹாலிவுட் மெகா பட்ஜெட் படங்கள் எல்லாம் இந்த  ஆண்டு துவக்கத்தில்  எதுவும் வெளி வரவில்லை அதனால் அதிலிருக்கும் முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்டு "Limited Series" வெளிவந்தது. டிஸ்னி Plus-ல் மட்டும் Wanda Vision, Loki, What If (animation) என்று பல தொடர்கள். அதில் Wanda Vision தொடரை தெரிவு செய்து பார்த்தோம். தொடக்கத்தில் சற்று தொய்வு தோன்றினாலும் ஒட்டு மொத்தமாக நன்றாகவே இருந்தது. End Game-ன் தொடர்ச்சி போல் படமாக்கப்பட்டிருந்தது கூடுதல் சிறப்பு.

அடுத்ததாக சென்ற ஆண்டு வெளிவந்த Netflix-ன் Mini Series ஆன " The Queen's Gambit". சமூக வலை தளங்களில் பல பாராட்டுகளை வாங்கிக் குவித்த இந்த தொடர் தொடக்கத்தில் எங்களை கவர்ந்தது எனினும் மிக மிக மெதுவாகச் செல்வதாகவே பட்டது. காட்சி அமைப்புகளும் நடிகர்களின் நடிப்பும் First Class.

Apple Tv-ன் தயாரிப்பான "Ted Lasso". இரண்டு season-கள் முடிவடைந்த நிலையில் கட்டாயம் பார்க்கவேண்டிய Series List-ல் இடம் பெற்றிருக்கும் இத்தொடரில் Jason Sudeikis Title Role-ல் நடித்திருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பு, சிரிக்கவைக்கும் தோற்றம் என்று அந்த கதாபாத்திரத்தை நம் மனதில் ஆழமாக பதித்து விட்டு செல்கிறார். "இப்படிப்பட்ட Positive People உலகத்தில் இருக்கிறார்களா என்ன?" என்று கேட்கத்தோன்றும் வகையில் எழுதப்பட்டிருக்கும் "Ted Lasso" பாத்திரத்தின் மேல் நமக்கு ஒரு ஈடுபாடு தோன்றுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

கடைசியாக உலக மக்கள் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்பட்ட, பரபரப்பாக பேசப்பட்ட  தொடர் "Stranger Things" . 2016-ம் ஆண்டு வெளிவந்த இத்தொடரை சென்ற மாதம் தான் பார்த்தோம். ஏன் என்று தெரியவில்லை தொடங்குவதற்கு அவ்வளவு தயக்கம். நாங்கள் பார்த்த தொடர்களிலேயே The Best என்று சந்தேகமில்லாமல் இத்தொடரைத் தான் கூறுவேன், 1980-களில் கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதால் E.T படத்தை நமக்கு நினைவுக்கு கொண்டுவந்தாலும் நடிப்பு, இயக்கம், எடிட்டிங், இசை என்று ஒரு Complete package ஆக இத்தொடர் அனைவரையும் கவர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

Season -3-ல் சற்று தொய்வு மற்றும் repetitive-ஆ இருக்கே என்று நினைத்தேன் என்றாலும்  அடுத்த Season-ஐ Skip செய்வேன் என்று தோன்றவில்லை.

தற்பொழுது Netflix-ல் Ragnarök தொடரை முடித்து விட்டு "Iron Fist" பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் பார்த்து ரசித்த அல்லது  பார்த்துக் கொண்டிருக்கும் Series-களை பகிர்ந்து கொள்ளுங்களேன் !!!

பின் குறிப்பு - தற்போதைய இளைய தலைமுறைகளை YouTube -ல் இருந்து தொலைக்காட்சி பக்கம் இழுக்க வேண்டும் என்றால் "மர்ம தேசம்" "ரமணி Vs ரமணி" போன்ற குறுந்தொடர்களை கொண்டு வந்தே ஆக வேண்டும் இல்லை என்றால் அமேசான், Netflix, Hot Star போன்ற Streaming service-கள் இந்தி தொடர்கள் போல் தமிழிலும் தடம் பதிக்க தொடங்கி விடுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


Comments

Popular posts from this blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா