"அண்ணாத்தே" - ஓர் அலசல்

கடந்த பத்து வருடங்களாக  ரஜினி படங்கள் வரவில்லை என்றால் "தலைவர் நடிக்கனும்ங்க" என்று கூறுவதும், பட ரிலீசுக்கு முன் ஆஹா, ஓஹோ என்று ப்ரோமோ செய்து கட் அவுட் வைப்பதும், பட வெளியீட்டுக்குப் பின் கழுவி ஊத்துவதும் என்று நமது சமூக வலைத்தளங்களுக்கு இவை பழகிப்போன சம்பிரதாயமாக மாறிப் போய் விட்டது. 

வழக்கமான ரஜினி Template-ல் படம் இருந்தால் "வயசாயிருச்சு இன்னும் இப்பிடியே நடிச்சா எப்பிடி?" என்று பொங்குவதும், வயதிற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்தால் "ரஜினி இப்பிடி நடிச்சா நல்லாவே இல்ல" என்று ஏமாற்றம் அடைவதுமாக பார்வையாளர்களாகிய நாம் விமர்சிப்பதும் நமக்கு பழக்கமாகவே ஆகி விட்டது.

பின் எப்படிப் பட்ட படத்தில் தான் அவர் நடிப்பது? அவருடைய வயது, உடல் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் இயக்குனர்களையும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளையும்  நாம் குறை கூறவே முடியாது ஆனால் திரைக்கதையை சற்று விறு விறுப்பாக நகர்த்தலாம். வடக்கத்திய வில்லன்களைத் தவிர்க்கலாம். நாமும் எல்லா Frame-லும் ரஜினியே வர வேண்டும் என்ற எதிர்பார்பைக் குறைத்துக் கொண்டால் இயக்குனர்களும் வலுவான சப்போர்டிங் ரோல்களை எழுத முனைவார்கள். 

காலம் காலமாக ரஜினி படங்களுக்கு மிகப் பெரிய பிளஸ் காமெடிக் காட்சிகள் தான் ஆனால் சமீபத்திய படங்களில் அவை மிஸ்ஸிங். குழந்தைகளுக்கான படங்களாக இருந்த ரஜினி திரைப்படங்கள் பெரியவர்களுக்கான படங்களாக மாறிப்போனதால் வன்முறைக் காட்சிகளும் கூடி விட்டதோ என்றும்  எண்ணத் தோன்றுகிறது.

சமீபத்திய ரஜினி படங்களில் "Ensemble Cast" என்ற நடைமுறை வந்துவிட்டது எனினும் அவர்கள் ரஜினியை விட ஸ்கோர் செய்துவிடக் கூடாது என்பதில் இயக்குனர்கள் கவனமாக இருப்பதால் அவர்கள் எல்லாம் படத்தின் Promo-க்களுக்கு பயன்படுகிறார்களே  தவிர கூட்டத்தில் ஒருவராகவே   தெரிகிறார்கள். அண்ணாத்தே படத்தில் குஷ்பூ, மீனா உள்ளிட்ட காட்சிகளை எல்லாம் யார் ரசித்தார்கள் என்று தெரியவில்லை.

காலா, தர்பார் போன்ற படங்களை விமர்ச்சித்த Middle-Age  ரசிகர்கள் கூட அண்ணாத்தே படம் ஓகே தான் என்று கூறுகிறார்கள். அவர்களும் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு விட்டார்களா அல்லது ரஜினி படம் என்ற Hype-யை தவிர்த்து விட்டு சாதாரணமான படமாகப் பார்க்கத் துவங்கி விட்டார்களா என்று தெரியவில்லை.

தற்போதைய இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகர்கள் என்ற வட்டத்திற்குள் ரஜினி பொருந்தாத அம்சமாகத் தெரிவதும் குழந்தைப் பருவத்தில் இருந்து அவரை ரசித்து வரும் ரசிகர்களாகிய நமக்கு வயதாகிப் போனதும் அவருடைய படங்கள் வெற்றி அடையாமல் போவதற்குக் காரணமாக இருக்கலாம் ஆனால் கலைக்கு எல்லை கிடையாது ஆகையால் "பேசாம இவரு நடிக்காமயே இருக்கலாம்" போன்ற விமர்சனங்களை நாம் தவிர்க்க வேண்டும்.

சிவாஜிக்கு "முதல் மரியாதை" போல ரஜினிக்கும் ஓர் திரைப்படம் வருங்காலத்தில் வெளி வந்து சக்கை போடு போடலாம். அனைத்தும் காலத்தின் கைகளில்!!!


Comments

Popular posts from this blog

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - Montreal #roadtrip #travel_blog