Laal Singh Chaddha (LSC)
ஆஸ்கார் விருது பெற்ற "Forrest Gump" என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்ற அறிவிப்போடு பலரால், முக்கியமாக என்னைப் போன்ற 'Tom Hanks" ரசிகர்களால் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட திரைப்படம் "Laal Singh Chaddha (LSC)". பல வித காரணங்களுக்காக இத்திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி சமூக வலைத்தளங்களில் கடும் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில் இம்மாதம் 11-ம் தேதி இந்தியாவில் Laal Singh Chaddha (LSC) திரைக்கு வந்துள்ளது. இயக்குனர் Advait Chandhan கதையில் பெரிதாக மாற்றம் ஏதும் செய்யாமல் நம் நாட்டிற்கேற்ப திரைக்கதையில் மாற்றங்களைச் செய்து ஆங்காங்கே ரசிக்கும் விதமான காட்சிகளோடு எமோஷனல் மற்றும் நகைச்சுவை என்னும் உப்பு. காரத்தைக் கலந்து சுவையாகவே படைத்திருக்கிறார். எழுபதுகளில் தொடங்கும் Laal Chaddha-வின் வாழ்கை அந்தந்த கால கட்டத்தில் நிகழும் முக்கிய நிகழ்வுகளால் எவ்வாறு திசை திரும்புகிறது என்பதை காட்டியவாறு நிறைவுறுகிறது. முக்கிய நிகழ்வுகள் என்றாலே அரசியலும் சினிமாவும் தானே!!! ஆங்கிலப் படத்தில் நாயகன் கல் பெஞ்சில் அமர்ந்தவாறு கதை சொல்லுவார் ஆனால...