Laal Singh Chaddha (LSC)
ஆஸ்கார் விருது பெற்ற "Forrest Gump" என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்ற அறிவிப்போடு பலரால், முக்கியமாக என்னைப் போன்ற 'Tom Hanks" ரசிகர்களால் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட திரைப்படம் "Laal Singh Chaddha (LSC)".
பல வித காரணங்களுக்காக இத்திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி சமூக வலைத்தளங்களில் கடும் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில் இம்மாதம் 11-ம் தேதி இந்தியாவில் Laal Singh Chaddha (LSC) திரைக்கு வந்துள்ளது.
இயக்குனர் Advait Chandhan கதையில் பெரிதாக மாற்றம் ஏதும் செய்யாமல் நம் நாட்டிற்கேற்ப திரைக்கதையில் மாற்றங்களைச் செய்து ஆங்காங்கே ரசிக்கும் விதமான காட்சிகளோடு எமோஷனல் மற்றும் நகைச்சுவை என்னும் உப்பு. காரத்தைக் கலந்து சுவையாகவே படைத்திருக்கிறார்.
எழுபதுகளில் தொடங்கும் Laal Chaddha-வின் வாழ்கை அந்தந்த கால கட்டத்தில் நிகழும் முக்கிய நிகழ்வுகளால் எவ்வாறு திசை திரும்புகிறது என்பதை காட்டியவாறு நிறைவுறுகிறது. முக்கிய நிகழ்வுகள் என்றாலே அரசியலும் சினிமாவும் தானே!!!
ஆங்கிலப் படத்தில் நாயகன் கல் பெஞ்சில் அமர்ந்தவாறு கதை சொல்லுவார் ஆனால் Amir Khan ஓடும் ரயிலில் அமர்ந்து கொண்டு சொல்கிறார் அவரோடு சேர்ந்து நாமும் பயணிப்பது போல் இருந்தது.
அமீர் கானின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா என்று மூன்று தலைமுறைகளை சித்தரித்த விதமும் அதே போல் அமீரின் நண்பராக வரும் நாக சைதன்யாவின் கடந்த தலைமுறையினை காட்டிய விதமும் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.
ஷாருக்கான் வரும் காட்சிகளும் போரில் அமீர்கான் செய்யும் கூத்துகளும் Cringe ஆக தெரிந்தாலும் நம்மை சிரிக்க வைத்து ரிலாக்ஸ் ஆக்கியது எனலாம்.
மேலே கூறப்பட்ட காட்சிகள் ஒரிஜினல் படத்தில் இருந்து வேறுபட்டிருந்தாலும் கைதட்டல் வாங்கியது.
பொதுவாகவே ரீமேக் படங்களை ஒரிஜினலோடு ஒப்பிட கூடாது எனினும் இங்கு Tom Hanks -ன் Subtle ஆன நடிப்பை அமீர்கானின் சற்று மிகைப்பட்ட (Caricatured Performance) நடிப்போடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை எனினும் சிறிது நேரத்தில் அமீரின் நடிப்பிற்கு நம்மால் அட்ஜஸ்ட் ஆகவும் முடிந்தது.
இப்படத்தின் மூலம் வேறெந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ள கூடாது என்பதில் அமீர்கான் உறுதியாக இருந்திருப்பார் போல மத, அரசியல் தொடர்பான காட்சிகள் அனைத்தும் மிக ஜாக்கிரதையாகவே கையாளப்பட்டிருக்கிறது.
ஆங்காங்கே வரும் Montage பாடல்கள் படத்திற்குத் தேவையான Feel ஐத் தந்தது.
அனைத்து நடிகர்களில் தேர்வும் கனகச்சிதம் கரீனா கபூர் உட்பட. அமீருக்கு அடுத்தபடியாக கை தட்டல் வாங்குவது அவருக்கு அம்மாவாக வரும் Mona Singh .குழந்தை நட்சத்திரங்கள் நம் கண்களிலேயே நிற்கிறார்கள்.
அமீர்கான் எப்பொழுது ரயிலை விட்டு இறங்குகிறாரோ அங்கிருந்து படம் ஆமை வேகத்தில் நகரவில்லை எனினும் நமக்கு அவ்வாறு தான் தோன்றியது.
மொத்தத்தில் Laal Singh Chaddha (LSC) is one of the finely made remake movies எனலாம்.
திரையரங்கில் சென்று நான் பார்த்த இப்படம் விரைவில் Netflix-ல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. உங்களுக்கு வன்முறை, குத்துப் பாடல், பன்ச் Dialogue பேசும் வழக்கமான Template மசாலா படங்கள் பிடிக்காது என்றால் Laal Singh Chaddha (LSC)-வை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்.
Comments
Post a Comment