Rocketry : The Nambi effect

நடிகர் ஆர்.மாதவன் உண்மைக்கதையை கையில் எடுத்துக் கொண்டு தயாரித்து, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அவதரித்திருக்கும் திரைப்படம் "Rocketry : The Nambi effect".

நாராயணன் நம்பி என்பவர் யார்? ISRO - வில் அவர் ஆற்றிய பணி எத்தகையது, விண்வெளி ஆராய்ச்சியில் அவரின் பங்களிப்பு எந்த அளவிற்கு போற்றுதற்குரியது, எதிர்பாரா விதமாக அவருக்கு ஏற்பட்ட அவமானம் என்ன? போன்ற கேள்விகளுக்கு நம்மில் பலர் திரைப்படம் பார்க்காமலேயே சமூக வலைத்தளங்களின் உதவியுடன் விடை அறிந்து கொண்டுவிட்டோம் ஆகையால் இந்த திரைப்படத்தை அந்த கோணத்தில் அலசுவதும் விவாதிப்பதும் தேவையற்றது என்பது எனது தாழ்மையான கருத்து.




Rocketry : The Nambi effect ஒரு திரைப்படமாக என்னை எந்த அளவிற்கு கவர்ந்தது என்பதை மட்டுமே  உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓடும் இத்திரைப்படத்தை பரபரப்பு குறையாமல் மாதவன் கொடுத்திருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். 

இயக்குனர் மணிரத்தினத்தின் சாயல் காட்சி அமைப்புகளில் உணர முடிந்தது எனினும் அனைவரும் காதில் கேட்கும் விதமாக  வசனங்களை பேசி நடித்திருப்பது ஆறுதல். 

படம் எங்கெல்லாம் தொய்வடைகிறதோ அங்கெல்லாம் நம்மை நிமிரவைக்கும் வைக்கும் வண்ணம் கதை U-turn எடுப்பது அட்டகாசம். எடிட்டர் பிஜித் பாலாவை பாராட்டியே ஆக வேண்டும்.

விண்வெளி ஆராய்ச்சி பற்றிய திரைப்படம் என்பதால் Technical விஷயங்கள் பாதிப்படத்திற்கு மேலாக பேசப்படுகிறது அவையெல்லாம் வெகுஜனங்களால் ரசிக்க முடியுமா? எனினும் உலகத்தரத்தில் படமாக்கப்பட்டிருக்கும்  இவ்வகையான காட்சிகளை தவிர்ப்பதும் இயலாதது தான்.

அனைத்து நடிகர்களும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர் எனினும் மொழி தெரியாமல் தமிழ் பேசுவது போல ஏன் அவர்களுக்கு dubbing கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.

மாதவன்  நடிப்பில் உலகநாயகனை நினைவு படுத்துகிறார் எனினும் அவரை copy செய்யாமல் தனது பாணியிலேயே நடித்திருப்பது சிறப்பு.

சிம்ரன் பெரிதாக மீனா  கதாபாத்திரத்தில் ஒட்டவில்லை.

நம்பி நாராயணன் ஒற்றை மனிதராக உலகமெங்கும் பயணித்து செய்யும் வேலைகளைப்  பார்க்கும் போது சற்று நம்புவது கடினமாக இருப்பதுடன் Cinematic Liberty என்ற பெயரில் சற்று மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளை அமைத்து விட்டார்களோ? என்றும் எண்ணத் தோன்றுகிறது.

ரஷ்ய பயணத்திற்குப் பிறகு சில மாதங்களிலேயே அவர் காவல்துறையால் கைது செய்யப்படுவதாக காட்டப்படுகிறது ஆனால் மாதவனுக்கு சட்டென்று வயது மற்றும் தொப்பை கூடி விட்டதாகத் தோன்றுகிறதே?

நம்பி நாராயணனைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள உதவியிருக்கிறது Rocketry : The Nambi effect திரைப்படம் ஆனால் A , B Center-களைக் கடந்து இப்படம் ரசிக்கப்படுமா என்பது சந்தேகமே. அத்தகைய எண்ணத்தோடு இப்படம் தயாரிக்கப்படவில்லை என்பதும் எனது எண்ணம்.

அமேசான் Prime -ல் காணக் கிடைக்கும் இத்திரைப்படத்தை கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம், தெரியாத தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - Montreal #roadtrip #travel_blog