Parking (Tamil)
சில திரைப்படங்களின் கதையே எதிர்பாரா திருப்பங்களுடனும் முன்னும் பின்னும் பரபரப்பாக நகரும் நிகழ்வுகளுடனும் சுவாரசியமாக இருக்கும். இப்படிப்பட்ட படங்களுக்கு திரைக்கதை அவ்வளவு முக்கியம் இல்லை ஆனால் சில திரைப்படங்களின் கதையோ ஒரு வரியில் சொல்லக்கூடியதாக இருக்கும் இயக்குனரும் அதை தொடக்கத்திலேயே பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தி விடுவார் அவ்வளவு ஏன் ட்ரைய்லர், Sneak Peek-லேயே நாம் தெரிந்து கொண்டுதான் படம் பார்க்கவே செல்வோம் அப்படிப்பட்ட படங்களுக்கு திரைக்கதையும் பொருத்தமான நடிகர்கள் தேர்வும் மிக அவசியம் அவைகளால் மட்டுமே பார்வையாளர்களை இரண்டு மணி நேரம் திரையங்குகளில் அமர வைக்க இயலும். இதில் "Parking" இரண்டாவது ரகம். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் நடிகர்களை வைத்துக் கொண்டு, Easy ஆக கணிக்கக்கூடிய திரைக்கதையையும் எழுதி விட்டு Commercial Elements என்று கூறிக்கொண்டு கதைக்கு தேவையற்ற மசாலாக்களை சேர்க்காமல் அனைவரும் ரசிக்கும் வண்ணம் திரைப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணாவிற்கு பாராட்டுக்கள். அளவற்ற கோபம் பழி உணர்ச்சியைத் தூண்டும் அதுவே மனிதனை மிருகம...