Dilwale Dulhania le Jayenge (DDLJ)

இந்தியாவிலேயே அதிக வருடங்களாக திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம், மனதை சுண்டி இழுக்கும் பாடல்கள், ஷாருக்கான் மற்றும் கஜோலின் இளமைத் துள்ளலுடன் கூடிய நடிப்பு என்று இப்படத்திற்கு பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும் "சூப்பர் Movie " என்று பல பேர் எனக்கு கதை சொல்லியிருந்தாலும்  நான் இதுவரை இப்படத்தை முழுமையாகப் பார்த்ததில்லை!!!

நம் அறிவால் அல்ல நம் மனதால் சிந்திக்க வைக்கும் DDLJ-வை இந்தக் கொரோனா கால கட்டத்தில் ஒரு வழியாகப் பார்த்து விட்டேன்.

படம் தொடங்கி அரைமணி நேரத்துக்குள்ளாகவே இப்படத்தின் கதை என்னவாக இருக்கப்போகிறது என்று இயக்குனர் தனது பாத்திரங்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக விவரித்து விடுகிறார் இருப்பினும் அடுத்த இரண்டரை மணி நேரத்திற்கு நம்மால் அமர்ந்து படத்தை பார்க்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் திரைக்கதை மற்றும் பாடல்கள்.

இப்படத்தின் கதையை 1995-க்கு மேல் பலவாறு பல படங்களில் காட்டப்பட்டு விட்டது ஆனால் ஒரிஜினலுக்கு (முதலில் வந்தது) என்று ஓர் சிறப்பு உண்டல்லவா அதுவே படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

அக்காலத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட ஷாருக்கானின் கோணங்கி சேட்டையும்  trade mark சிரிப்பும் கலந்த நடிப்பு நமக்கு கொஞ்சம் ஓவராகத் தெரிந்தாலும் குறை சொல்வதற்கில்லை. 

மழையில் ஆடிப்பாடும் காட்சிக்காக பெயர்பெற்ற கஜோல் அனைத்து விதமான எமோஷன்களையும் மிக அழகாக வெளிப்படுத்தி படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்.

படத்தின் முதல் பாதியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே  நடிகர்கள் வந்தாலும் அடுத்த பாதியில் ஒரு பட்டாளத்தையே இறக்கி அதை சமன் செய்து விடுகிறார் இயக்குனர் ஆதித்யா சோப்ரா. ஒரு கட்டத்தில்  கிட்டத்தட்ட ஒருமணி நேரம் ஹீரோ, ஹீரோயின் மட்டுமே திரையில் வருகிறார்கள் இதெல்லாம் இப்பொது சாத்தியமா என்று எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.

காதல், பெற்றோர்களின் பாசம், உறவினர்களின் அன்பு, கோபம், ஏமாற்றம், இயலாமை, நாட்டுப்பற்று  என்று அனைத்து வகையான உணர்ச்சிகளையும் படத்தில் பல்வேறு Legendary  நடிகர்களின் கதாபாத்திரங்களின் வாயிலாக நமக்குக் கொடுக்கிறார் இயக்குனர். இவர்கள் அனைவருமே படத்தின் வெற்றிக்குக் காரணம் என்று கூறினால் மிகையாகாது என்று தான் நினைக்கிறேன். Amrish Puri -யின் குரல் நம்மை கிடுகிடுக்க வைக்கிறது. மிரட்டுகிறார் மனிதர். நாணயத்தின் ஒரு பக்கமாக இவர் என்றால் அடுத்த பக்கம் Anupam Kher. Cool Dad ஆக வருகிறார். பணிவான மனைவியாக வரும் Farida Jalal நம் அம்மாவை நினைவு படுத்துகிறார்.

25 வருடங்களுக்கு முன் இத்திரைப்படத்தின்  காட்சிகளைப் பார்த்த போது உண்மையான காதல் எப்போதும் ஜெயிக்கும் என்று கூறத் தோன்றியது ஆனால் இப்போதோ நாம் வெளிநாட்டில் வசிக்கும் இந்நிலையில் " நம் குழந்தைகளிடம் தாய் நாட்டுப்பற்றை உடைகள், உணவுகள், பழக்கவழக்கங்களில் மூலம் மட்டுமே திணிக்க முயலக்கூடாது.. Subtle- ஆக அவர்களின் மனங்களில் வளர்க்க வேண்டும்" என்று இயக்குனர் கூறிச்செல்கிறோ  என்று எண்ணத் தோன்றுகிறது !!! (நமக்கு வயசாயிருச்சு 😆)

"Patriotism Is An Emotion...Feel it...Don't try to deal with it "

நேரமிருந்தால் நீங்களும் அமேசான் பிரைம்-ல் பார்க்கலாம். பழைய நினைவுகளில் திளைக்கலாம். கரும்பு சாப்பிட கூலி வேண்டுமா என்ன?!

Comments

Popular posts from this blog

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - Montreal #roadtrip #travel_blog