மொத ராத்திரி
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹீரோ பில்டப் இல்லாமல் கைநிறைய கதாபாத்திரங்களோடு வெளிவரும் குடும்ப படங்கள் (குட் நைட், டூரிஸ்ட் பேமிலி, குடும்பஸ்தன்) சமீப காலமாக வெற்றி கண்டு வருகின்றன அவ்வரிசையில் ஒரு படி மேலே சென்று திரைக்கதையை மட்டுமே நம்பி களமிறங்கி நம்மை கவர்ந்த திரைப்படம் தான் "மொத ராத்திரி". சமுக வலைத்தளங்களில் பரவலாக இப்படத்தை பற்றிய விமர்சங்கள் காணப்பட்டாலும் யாரும் கதையயை லீக் அவுட் செய்யாததால் netflix-ல் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தை சுவாரசியம் குன்றாமல் காண முடிந்தது. விருப்பம் இல்லாமல் திருமண பந்தத்தில் இணையும் இருவரின் ஒரு நாள் தான் "மொத ராத்திரி". படம் தொடங்கும் பொழுதே துணைக் கதாபாத்திரங்களை பிரதானமாக காட்டும் இயக்குனர் இப்படம் முழுக்க இப்படிதான் என்று சொல்லாமல் சொல்லி விடுகிறார். குடும்ப உறுப்பினர்களாக வரும் அனைவருமே பின்னி பெடலெடுக்கிறார்கள் இவர்களை விட காதலனாக வரும் இயக்குனர் ராஜா கருப்பசாமியும் அவனின் நண்பர்களும் அவர்கள் வரும் காட்சிகள் தான் அல்டிமேட். கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் ஒரே மாதிரியான எமோஷன தான் என்றாலும் ஹீரோவின் நடிப்பில் எதார்த்த...