Mimi - Hindi Movie
2021-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று என சில பல வலைத்தளங்கள் பரிந்துரைத்ததாலும் Netflix-ல் காணக் கிடைத்ததாலும் நாம் சமீபத்தில் பார்த்து ரசித்த படம் " Mimi". அமெரிக்க தம்பதிகளாக ஜானும் சம்மரும் தங்களுடைய குழந்தையை சுமந்து பெற்றெடுக்க ஒரு வாடகைத் தாயை (Surrogate Mother) சில வருடங்களாக தேடித் கொண்டிருப்பதாக தொடங்குகிறது படம். எதிர்பார்த்தபடி ஒரு தாயை கண்டு பிடிக்க முடியாத வருத்தத்தில் இருக்கும் அவர்களின் பார்வையில் படுகிறாள் டான்சர் Mimi (Kirti Sanon). அவளையே ஒத்துக் கொள்ள வைப்பதாக வாக்களிக்கும் தங்கள் டிரைவர் Bhanu Pratap (Pankaj Tripati)-யை நம்பி பொறுப்பை ஒப்படைகின்றனர். பண தேவை இருப்பதால் மிமியும் இதற்கு ஒப்புக் கொள்ள அனைத்தும் சுமூகமாக செல்கிறது. குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களே இருக்கும் சமயத்தில் எதிர்பாரா காரணங்களால் அமெரிக்க தம்பதியர் குழந்தையை கை விட அதை என்ன செய்வது என்று தெரியாமல் முச்சந்தியில் நிராதரவாக நிற்கிறாள் மிமி. மிமி குழந்தையை பெற்றெடுத்தாளா? திருமணமாகாமல் கர்ப்பிணியாக நிற்கும் அவளை Judge செய்யும் சமூகத்தை எப்படி சமாளித்தாள்?...