Mimi - Hindi Movie

2021-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று என சில பல வலைத்தளங்கள் பரிந்துரைத்ததாலும் Netflix-ல் காணக் கிடைத்ததாலும் நாம் சமீபத்தில் பார்த்து ரசித்த படம் " Mimi".

அமெரிக்க தம்பதிகளாக ஜானும் சம்மரும் தங்களுடைய குழந்தையை சுமந்து பெற்றெடுக்க ஒரு வாடகைத் தாயை (Surrogate Mother) சில வருடங்களாக தேடித் கொண்டிருப்பதாக தொடங்குகிறது படம். எதிர்பார்த்தபடி ஒரு தாயை கண்டு பிடிக்க முடியாத வருத்தத்தில் இருக்கும் அவர்களின் பார்வையில் படுகிறாள் டான்சர் Mimi (Kirti Sanon). அவளையே ஒத்துக் கொள்ள வைப்பதாக வாக்களிக்கும் தங்கள் டிரைவர் Bhanu Pratap (Pankaj Tripati)-யை நம்பி பொறுப்பை ஒப்படைகின்றனர்.

பண தேவை இருப்பதால் மிமியும் இதற்கு ஒப்புக் கொள்ள அனைத்தும் சுமூகமாக செல்கிறது. குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களே இருக்கும் சமயத்தில் எதிர்பாரா காரணங்களால் அமெரிக்க தம்பதியர் குழந்தையை கை விட அதை என்ன செய்வது என்று தெரியாமல் முச்சந்தியில் நிராதரவாக  நிற்கிறாள் மிமி.

மிமி குழந்தையை பெற்றெடுத்தாளா? திருமணமாகாமல் கர்ப்பிணியாக நிற்கும் அவளை Judge செய்யும் சமூகத்தை எப்படி சமாளித்தாள்? வாடகைத்தாய் என்ற Concept-யையே புரிந்து கொள்ள முடியாத அவளின் பெற்றோருக்கு என்ன பதிலளித்தாள்? யார் யார் அவளுக்கு ஆதரவாக நின்றனர்? போன்ற கேள்விகளுக்கு விடையளித்து சுபத்தில் முடிகிறது "Mimi" திரைப்படம்.

படத்தில் கதையைக் கேட்டதும் இது ஒரு அழுவாச்சி கதையாக இருக்குமோ என்று நினைத்து விட வேண்டாம். 

நமது தமிழ் படங்களில் நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடைப்பட்ட இடங்களாக மதுரை, திருச்சி என்று காட்டுவது போல இந்தியில் பல திரைப்படங்களில் உ.பி-யை காட்டுகிறார்கள் அவ்வாறான படங்களில் Situation comedy நன்றாகவே இருக்கும். மிமியிலும் அது workout ஆகி இருக்கிறது. மலையாளப் படங்களைப் போலவே இங்கும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் தூள் செய்கிறார்கள்.  




டைட்டில் Character-ல் நடித்திருக்கும் Kirti Sanon மிக அருமையாக நடித்திருக்கிறார்.

டிரைவர் ஆக வரும் Pankaj Tripati பழம் பெரும் நடிகர் "Paresh Rawal"-யை நினைவு படுத்துகிறார். பல திரைப்படங்களில் அவரை நாம் பார்த்திருக்கிறோம். கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் Pankaj.

அடுத்ததாக குறிப்பிட வேண்டியது மிமியின் எதற்கும் தோள் கொடுக்கும்  தோழியாக வரும் ஷாமா. அனைத்து பாவனைகளையும் அழகாக  முகத்தில் கொண்டு வருவதுடன் லாவகமாக நிமிடத்திற்கு நிமிடம் அதை மாற்றுகிறார்.

மொத்தத்தில் Mimi திரைப்படத்தின் Casting கனகச்சிதம் அமெரிக்க தம்பதியர் உட்பட!!1

நமது யூகங்களை பல்வேறு இடங்களில் உடைத்தெறிந்து கொண்டே முன் நகரும்  மிமி திரைப்படம் அங்கங்கே Draggy ஆவது போல தோன்றினாலும் Bore அடிக்காமல் கொண்டு சென்ற இயக்குனர் Laxman Utekar-க்கு பாராட்டுக்கள்.

Mala Aai Vhhaychy! என்ற மராத்தி திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் "Mimi" படத்தை கண்டிப்பாக ஒருமுறை காணலாம். 

உணர்ச்சி வயப்பட்டு எடுக்கும் எந்த முடிவும் நன்மையைத் தராது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிச் சென்றிருக்கும் மிமி திரை படத்தை இதுவரை பார்க்கவில்லை என்றால் தயவு செய்து Google செய்யாமல் படத்தை பாருங்கள்..ரசிப்பீர்கள்.

கொசுறு தகவல் - படத்திற்கு இசை இசைப்புயல் " A.R.Rahman".

Comments

Popular posts from this blog

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - Montreal #roadtrip #travel_blog