KGF

 அதீத வன்முறைக் காட்சிகள், Anti-Hero, Punch/Cringe Dialogues இவைகளைக் கண்டாலே அத்திரைப்படத்தை choice-ல் விட்டுவிடும் வழக்கம் கொண்ட நான் இந்த மூன்று அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட 'KGF" திரைப்படத்தை (ஏதோ ஒரு உந்து சக்தி என்னை ஊக்கித்தள்ள) சமீபத்தில் பார்த்து விட்டேன்.

படம் ஆரம்பித்த சில நிமிடங்கள் "Over Build-up ஆ இருக்கே", "ஐயோ முடியலடா சாமி", "இப்பவே கண்ண கட்டுதே" போன்ற வசனங்களை Mind Voice-ல் ஓட விட்டு அமர்ந்திருந்தேன் ஆனால் எப்போது நான் படத்தின் ஓட்டத்தோடு  ஒன்றிப்போனேன்? என்று குறிப்பிட்டு கூற முடியாத ஒரு தருணத்தில் ஆ என்று  என்னையே நான் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டேன்!!!

படத்தின் நிறை, குறைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம் ஆனால் இப்படம் தேசிய அளவில் வெற்றி பெற்றதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது அது என்னவென்று அறுதியாக கோடிட்டு காட்ட என்னால் முடியவில்லை.

விறு விறுவிறுவென்று நகரும் திரைக்கதையா? Rocky Bhai ஆக வரும் Yash மீது நமக்கு எந்தவித "Predefined Judgement"-ம் இல்லாததாலா? களத்தில் நம்மை கட்டிப்போடும் BGM மற்றும் பாடல்களா? அம்மா செண்டிமெண்ட் கட்சிகளா? தெரியவில்லை 

முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒரே Feeling-சை தான் கோபம், ஏமாற்றம். ஆத்திரம், பழி வாங்குதல் என்று வேறு வேறு இடங்களில் வெளிப்படுத்துகிறார்கள் அதனால் அதைப் பற்றி விமரிசிக்க ஒன்றும் இல்லை ஆனால் Dubbing அசத்தலாக இருந்தது. வேற்று மொழி திரைப்படத்தை பார்க்கிறோம் என்கிற உணர்வு எங்கும் எழவில்லை.

மேலே சொன்ன அனைத்து மசாலாக்களும் முதலில் சலிப்பைத் தந்தாலும் படம் நகர நகர நம்மை அதில் அடிமைப்படுதி விடுகிறது. அதுவெ நம்மை பார்ட்-2 வைப் பார்க்கத் தூண்டுகிறது. பார்ட்-3 வந்தாலும் பார்ப்போம்!!!

Trend Setters-களாக வெளிவரும் இவ்வகைத் திரைப்படங்கள் தார்மீக ரீதியாக எந்த வித பொறுப்புகளையும் ஏற்பதில்லை என்பது நிஜமே என்றாலும் பொழுது போக்கிற்காக பார்க்கலாம் என்று நினைக்கிறன்.

குழந்தைகளுக்கு இம்மாதிரியான திரைப்படங்களை அறிமுகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

எச்சரிக்கை : கதாநாயகன் Yash-ன் முந்தைய திரைப்படங்களை தயவு செய்து கூகுள் செய்யாதீர்கள் 😆 

இப்படத்தைக் குறித்த உங்களின் கருத்துகளையும் கமெண்ட்ஸில்  Share செய்து கொள்ளுங்களேன்.

Comments

Popular posts from this blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா