நாயகன் (1987)
அனைவராலும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படும் சரித்திரப்படமான பொன்னியின் செல்வன் -2 வரும் ஏப்ரல் 28-ம் நாள் உலகெங்கும் வெளிவர இருக்கும் இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் 35 வருடங்களுக்கு முன் வெளிவந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்த "நாயகன்" திரைப்படத்தைப் பற்றி எனது கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே நாயகன் திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்து வந்திருக்கிறேனே தவிர முழுப்படத்தையும் கவனமாக பார்த்ததில்லை ஏனோ (இளவயதில்) பார்க்கத் தோன்றவும் இல்லை. "மணிரத்னம் படத்துக்கு கூட்டிட்டு போனாலே (காட்சிகள் இருட்டாக இருப்பதால்) பசங்களுக்கு காச்சல் வந்துருது" என்ற எனது அம்மாவின் கமெண்ட் காரணமாகவும் இருக்கலாம் 😆 நாயகன் படம் என்றாலே "நீங்க நல்லவரா? கெட்டவரா?", "அவங்கள நிறுத்த சொல்லு நானும் நிறுத்துறேன்", "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல" ", Mera Baba Mar Gaya" போன்ற famous வசனங்களும் கமலும் இளையராஜாவும் கரகர குரலில் கண்ணீரை வரவழைக்கும் வண்ணம் பாடி இருக்கும் "தென்பாண்டிச் சீமை...