Doctor G

ஆயுஷ்மான் குரானா-வின் நடிப்பில் இயக்குனர் Anubhuti Kashyap-ன் இயக்கத்தில் சென்ற வருட கடைசியில் வெளிவந்த திரைப்படம் "Doctor  G".

போபாலில் M.B.B.S முடித்த கையோடு M.D. Ortho படிக்க ஆசைப்படும் கதாநாயகன்  பல்வேறு காரணங்களால் M.D. Gyno-ல் (விருப்பமில்லாமல்) சேர்கிறார்.அதனால் என்னனென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்? எவ்வாறு அவற்றை சமாளிக்கிறார்? மகப்பேறு மருத்துவம் பெண்களுக்குரியது என்ற அவருடைய குறுகிய பார்வை மாறியதா? போன்ற கேள்விகளுக்கு விடையளித்து சுபத்தில் முடிவடைகிறது "Doctor G" திரைப்படம்.




வழக்கம்போல் ஆயுஷ்மான் உதய் alias Guddy என்ற கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக சென்று அமர்கிறார் ஆனால் அதுவே அவருக்கு பாதகமாகவும் அமைந்து விடுகிறது ஏனெனில் அவருடைய முந்தைய படங்களை நினைவுறுத்தும் வண்ணமே இந்த கதாபாத்திரமும் எழுதப்பட்டிருப்பது போன்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.

ஆணாதிக்க, பிற்போக்கு வாதியாக அவரை சித்தரித்த விதத்தில் அவர் மேல் நமக்கு ஒன்றும் அவ்வளவு கோபம் வரவில்லை மாறாக அவர் கூறும் சில விஷயங்கள் நியாயமாகவே படுகிறது.

அவரின் நண்பராக வரும் "Chaddi" நன்றாக நடித்திருந்தார். அவரின் Dialogue Delivery சிரிப்பை வரவழைத்தது எனலாம்.

விரல் விட்டு எண்ணக்கூடிய ஆண் கதாபாத்திரங்களைத் தவிர அனைவரும் பெண்களே!!!

அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் நடக்கும் அவலங்களை "Lighter Mode"-ல் காட்டியிருப்பது சிறப்பு.

படத்தில் கதை என்று ஒன்று பெரிதாக இல்லை எனினும் பல்வேறு காட்சிகளை  ரசிக்கும் படி அமைத்திருந்தது  இயக்குனரின் திறமையை காட்டுகிறது.

கதையின் போக்கு ஒரு கட்டத்திற்கு மேல் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருப்பதும், பார்த்த காட்சிகளே repeat mode-ல் வருவதும், நாம் சுலபமாக யூகிக்கும் வண்ணம் படம் நகருவதும் ஏமாற்றமே எனினும் ஏதோ ஒன்று இப்படத்தை " Feel Good Movie" பட்டியலில் சேர்த்து விடுகிறது.

Netflix-ல் காணக்கிடைக்கும் இத்திரைப்படத்தை நேரமிருந்தால் பாருங்கள்.

P.S - This Movie is Strictly for Adults.

Comments

Popular posts from this blog

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - Montreal #roadtrip #travel_blog