மொத ராத்திரி
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹீரோ பில்டப் இல்லாமல் கைநிறைய கதாபாத்திரங்களோடு வெளிவரும் குடும்ப படங்கள் (குட் நைட், டூரிஸ்ட் பேமிலி, குடும்பஸ்தன்) சமீப காலமாக வெற்றி கண்டு வருகின்றன அவ்வரிசையில் ஒரு படி மேலே சென்று திரைக்கதையை மட்டுமே நம்பி களமிறங்கி நம்மை கவர்ந்த திரைப்படம் தான் "மொத ராத்திரி".
சமுக வலைத்தளங்களில் பரவலாக இப்படத்தை பற்றிய விமர்சங்கள் காணப்பட்டாலும் யாரும் கதையயை லீக் அவுட் செய்யாததால் netflix-ல் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தை சுவாரசியம் குன்றாமல் காண முடிந்தது.
விருப்பம் இல்லாமல் திருமண பந்தத்தில் இணையும் இருவரின் ஒரு நாள் தான் "மொத ராத்திரி". படம் தொடங்கும் பொழுதே துணைக் கதாபாத்திரங்களை பிரதானமாக காட்டும் இயக்குனர் இப்படம் முழுக்க இப்படிதான் என்று சொல்லாமல் சொல்லி விடுகிறார்.
குடும்ப உறுப்பினர்களாக வரும் அனைவருமே பின்னி பெடலெடுக்கிறார்கள் இவர்களை விட காதலனாக வரும் இயக்குனர் ராஜா கருப்பசாமியும் அவனின் நண்பர்களும் அவர்கள் வரும் காட்சிகள் தான் அல்டிமேட்.
கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் ஒரே மாதிரியான எமோஷன தான் என்றாலும் ஹீரோவின் நடிப்பில் எதார்த்தம் இருந்தது.
சேத்தன் சமீப காலமாக பலதரப்பட்ட ரோலில் கலக்கி வருகிறார் இதில் சற்று வித்தியாசமான கேரக்டர் என்றாலும் நடிப்பை பொறுத்தவரை அதே Shade தான்.
எந்த கதாபாத்திரத்தையும் அந்தரத்தில் விடாமல் மற்ற கதாபாத்திரங்களோடு கதையோடு இணைத்த விதம் அருமை.
இயக்குனர் பல்வேறு மெசேஜ்களை படம் முழுக்க தூவிக்கொண்டே வருகிறார் அதில் சில மனதை கவருகின்றன உதாரணமாக "காதல் வேறு கல்யாணம் வேறு" "Too much அடக்குமுறை தவறான முடிவுகளை எடுக்க குழந்தைகளை தூண்டும்" "Pasi is Past, move on"
சில அறிவுரைகள் திணிக்கப்படவை போல தோன்றுகின்றன (சாதிப்பிரச்சனை, பெண் கல்வி).
மொத்தத்தில் ரசிக்கும் படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்த இளம் அறிமுக இயக்குனரை பாராட்டலாம்.
படத்தில் Drawbacks இல்லையா?! இருக்கிறது - Repetitive dialogues, காட்சிகள், Logic ஓட்டைகள், ஓவர் ஆக்டிங் போல காணப்படும் Loud Scenes ஆனால் பொறுத்துக் கொள்ளலாம்!
படம் பார்த்தாகிவிட்டதா?! உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.
.jpeg)
Comments
Post a Comment