நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி -2


ரோமின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஜுதேயாவில் புதிய பிரச்சனை உருவானது. ரோமானிய மன்னரே கடவுள் என்று அனைத்து தேவாலயங்களிலும் ப்ரதிஷ்டை செய்யப்பட  "ஜெஹோவா" என்ற ஒருவரே எங்கள் கடவுள் என்று யூத  புரட்சியாளர்கள் ரோமானியர்களின் ராணுவத்தை சிதறடித்து ஜெருசலேம் மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதியை தங்கள் வசம் கொண்டு வருகின்றனர்  எனினும் வெகு விரைவிலேயே ரோமானிய ஆட்சி திரும்பியதோடு மட்டுமல்லாமல் புகழ் வாய்ந்த சாலமன் ஆலயம் சூறையாடப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது.

கி.பி.70-ம் ஆண்டு இடிக்கப்பட்ட கோவில் இன்று வரை எழுப்பப்படவில்லை!!!

"அரேபியர்கள் பற்றி சொல்லவே இல்லையே?" என்று நினைக்கிறீர்களா? அப்பொழுதெல்லாம் அவர்கள் பார்வையாளர்களாக "காட்டரபிகள்" என்ற பெயரோடு குழுக்களாக  ரோமானியர்களின் ஆளுகைக்கு உட்பட்டு 80-க்கும் மேற்பட்ட   சிலைகளை  வழிபாடு செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் யூதர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதை ஓர் வேள்வி போல செய்யத் துவங்கினர் அதுவே ரோமானியர்களை வெல்லவதற்கான வெற்றிப்பாதையை அமைத்துக் கொடுக்கும் என்று தங்களின் மத போதகர்களால் அறிவுறுத்தப்பட்டார்கள். 

கி.பி.115-ல் எகிப்து, சிரியா,லிபியா,ஈராக் போன்ற இடங்களில் பரவி  வாழ்ந்த யூதர்கள் தங்கள் தவத்தைக் கலைத்து ரோமானிய பேரரசுக்கு எதிராக தங்கள் தாக்குதலைத் தொடங்கினர் ஆனால் அவர்களால் வெல்ல முடியவில்லை.

கி.பி.132-ல் அமைதியாக இருந்த ஜுதேயாவில் "சிமோன் பார்கொச்பா" என்ற படைத்தளபதியின் தலைமையில் அசுரத் தாக்குதலைத் துவக்கினர் யூதர்கள். இம்முறையும் தோல்வியையே சந்தித்த யூதர்கள் தங்கள் முயற்சியை மட்டும் விட்டு விடவில்லை. ரோமானியர்களால் இஸ்ரேலிலிருந்து  ஒட்டு மொத்தமாக நாடு கடத்தப்பட்டு சுற்று வட்டார அகதிகளாக குடியமர்த்தப் பட்டர்கள் யூதர்கள்.

அப்போது Constantine என்ற ரோமானிய பேரரசர் கிருத்துவத்தை மனமுவந்து ஏற்றுக் கொண்டு மதம் மாற ரோமிலிருந்தும்  யூதர்கள் வெளியேறத் துவங்கினர்.

கி.பி.614-ம் ஆண்டில் பெர்சிய ராணுவமும் பாலஸ்தீன யூதர்களும் ஒன்றிணைந்து ரோமானிய அரசை வென்று ஜெருசலேத்தை கைப்பற்றி முதல் யூத மன்னன் ஆட்சிக்கு வந்தான். 

அப்பாடா..யூதர்களின் கஷ்டம் தீர்ந்தது என்று நினைக்கிறீர்கள் தானே? உண்மையில் நடந்தது என்ன?

தொடரும்..

Comments

Popular posts from this blog

மகாராஜா

Manjummel Boys - Malayalam

மெய்யழகன் Vs லப்பர் பந்து