நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி -4
பல்வேறு ஐரோப்பிய தேசங்களுக்குச் சென்று Settle ஆகியிருந்த யூதர்களை மறுபடியும் காலம் விரட்டி அடிக்கத் தொடங்கியது. கி,பி.1492-ல் உயிர் பிழைக்க வேண்டுமென்றால் வேறு வழி இல்லை என்ற நிலையில் ஸ்பெயினிலிருந்து வெளியேறி ஹாலந்து , மொராக்கோ, பிரான்ஸ், இத்தாலி என்று குடியேறினார்கள். அதிகம் பேர் மத்திய ஆசியாவிற்கு வந்தனர் என்கிறார் ஆசிரியர்.
அதன் பின் போர்ச்சுகீசியர்களாலும் விரட்டி அடிக்கப்பட்ட யூதர்கள் சுல்தான்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சிரியா மற்றும் துருக்கியில் மனமுவந்து ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள்.
தாங்கள் இடம் பெயர்ந்த தேசங்களில் இருந்து கொண்டு தங்களின் புராதான மொழியான ஹீப்ருவை யூதர்கள் மீட்டுக் கொண்டிருந்த வேளையில் பதினாறாம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் கிங்- ஆல் ப்ராட்டஸ்டண்ட் ஆரம்பிக்கப்பட்டதன் விளைவாக கிருஸ்துவைக் கொன்றவர்கள் என்ற பெயரில் யூதர்கள் மேல் கிருத்துவர்களுக்கு இருந்த வெறுப்பு எவ்வாறு பன் மடங்கு பெருகியது என்பதை இங்கு மிக விரிவாக அலசுகிறார் ஆசிரியர். நாடு கடத்தப் பட்டுக்கொண்டிருந்த யூதர்கள் ஐரோப்பிய தேசங்களில் சித்திரவதை செய்யப்பட்டு கொன்று குவிக்கப்பட்டலாயினர். இங்கிருந்துதான் ஹிட்லர் நோட்ஸ் எடுத்திருப்பார் போல!
மறுபடியும் யூதர்கள் துருக்கி பேரரசிடம் தஞ்சம் புக உயிரை கையில் பிடித்துக் கொண்டு துருக்கியை நோக்கி நகர ஆரம்பித்தனர். இவ்வாறாக முஸ்லீம்களிடம் இணக்கமாகவே இருந்த யூதர்களை 1790-ம் ஆண்டிலிருந்து முஸ்லீம்களுக்கு சுத்தரவாக பிடிக்கவில்லை காரணம் நிலவுடமை தான்!!!
நில வங்கி என்ற பெயரில் உலகெங்கும் பரவி இருந்த யூதர்கள் நிதி அனுப்ப.. எவ்வாறு பாலஸ்தீனின் கணிசமான இடங்கள் யூதர்கள் வசம் வந்தது என்பதை நாம் தெரிந்து கொண்டால் தான் அவர்களின் இஸ்ரேல் கனவு எவ்வாறு நனவானது என்பதை புரிந்து கொள்ள முடியும். அந்த காலத்திலும் எப்படி பாலஸ்தீனில் லஞ்சம் தலை விரித்தாடியது, யூதர்கள் லஞ்சம் கொடுப்பதில் கில்லாடிகள் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
நாம் அனைவருக்கும் மிகப் பரிட்சயமான நெப்போலிய மாமன்னர் யூதர்களை எவ்வாறு நடத்தினார் என்பதைப் பற்றியும் ஒரு Chapter உண்டு..படிப்பதற்கு சுவாரஸ்யமாகவே இருந்தது.
இவ்வாறாக உள்ளே..வெளியே விளையாட்டு போல் அகதிகளாக சுற்றித் திரிந்த யூதர்கள் கணிசமான அளவில் ரஷ்யாவிலும் இருந்தனர் அங்கு சென்றும் தங்களின் மதத்தை உயர்வகப் பேச அங்கிருந்தும் விரட்டி அடிக்கப்பட்டிருகின்றனர். உலகின் எந்த மூலைக்கு அகதிகளாகச் சென்றாலும் யூதர்கள் தங்களின் கல்வி மற்றும் தொழில் திறமையால் நல்ல பொருளாதார சூழலில் தான் வாழ்ந்து வந்திருக்கின்றனர். மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிக்க இதுவுமே ஒரு காரணம் தான் !!!
எவ்வளவு துரத்தினாலும் மீண்டும் மீண்டும் முளைக்கக்கூடிய இனம் யூத இனம் என்பதை இந்த புத்தகத்தை படித்தால் புரிந்து விடும். ஐரோப்பிய தேசங்களில் இருந்து துரத்தப்பட்டாலும் மிஞ்சியவர்கள் அங்கு வாழ்ந்து கொண்டு இருந்ததோடு மட்டுமில்லாமல் "ஜியோனிஸம்" என்ற அமைப்பை உருவாக்கி உழைக்கவும் துவங்கி இருந்தார்கள். சத்தமில்லாமல் பாலஸ்தீனிலும் நிலம் குவிய ஆரம்பித்திருந்தது. இனிமே பயமில்லை..இஸ்ரேல் பிறந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
தொடரும்..
Comments
Post a Comment