நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி -5

 

யூதர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை உலகம் சுழலாமல் நிற்குமா என்ன?முதல் உலக யுத்தம் வருகிறது அதிலும் யூதர்கள் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி என்று தாங்கள் தங்கியிருக்கும் தரப்பிற்காக மட்டுமல்லாமல்  தங்களின் தேசக்கனவு நனவாகும் என்ற ஆவலுடன் பங்கேற்கிறார்கள் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆயுதங்களும் விஷ வாயுவும் யூதர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை தான்!! 

1917-ம் ஆண்டு பிரிட்டன், துருக்கியின் ஆளுகைக்கு உட்பட்ட பாலஸ்தீனை தாக்கியது. அதில வெற்றியும் கண்டது. யூதர்களுக்கு அளித்த வாக்குப்படி "பா ஃல்பர்" பிரகடனம் உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் லாபங்கள் பிரிட்டனுக்கு இல்லாமல் இல்லை. இஸ்ரேல் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டதே ஒழிய தங்கள் கனவு நிஜமாக யூதர்கள் இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை தான் வந்தது.

புத்தகத்தின் இப்பகுதிக்கு வந்ததும் தான் நாம் தற்காலத்தில்  கேள்விப்படும் மேற்கு கடற்கரை, காஸா போன்ற இடங்கள் பரவலாக குறிப்பிடப் படுகின்றன.அப்பொழுதும் கூட ஜோர்டானில் மன்னர் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை.

இவ்வாறாக யூதர்கள் நம்பிக்கையுடன் உருவாகப் போகும் தேசத்தை நம்பி வந்து கொண்டிருக்க..அப்புறம் போகலாம் என்று ஐரோப்பிய தேசங்களில் முக்கியமாக ஜெர்மனியில் வாழ்ந்தவர்களுக்கு கெட்ட காலம் ஹிட்லரின் ரூபத்தில் வந்தது.

யூதர்களுக்கு அங்கு நடந்த கொடுமைகளும் சித்திரவதைகளும்  Holocaust என்ற பெயரில் நாம் அறிந்ததே!!! இதைப் பற்றி ஆசிரியர் 2-3 Chapter-களில் விவரிக்கிறார். இதன் முடிவில் பெரும்பாலான யூதர்கள் பாலஸ்தீனுக்கு இடம் பெயர்ந்தனர்.

இரண்டாம் உலகப் போர் வந்தது. பிரிட்டன் காலனியாக இருந்த பாலஸ்தீன் அராபிகள் தங்கள் யூத வெறுப்பின் காரணமாக ஹிட்லரை ஆதரித்து அனைத்து மேற்கத்திய நாடுகளில் பகையை சம்பாதித்துக் கொண்டது!

போர் முடிவுக்கு வந்தது. 1947-ம் ஆண்டு பிரிட்டன் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பாலத்தீனை பிரித்து இஸ்ரேல் என்னும் தேசத்தை உருவாக்கும் பொறுப்பை ஐ.நா. விடம் ஒப்படைத்தது. மே 14, 1948-ம் ஆண்டு இஸ்ரேல் பிறந்தது கையோடு வன்முறையும் ஆரம்பமானது. யூதர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இப்பிரச்னையைப் பற்றி மகாத்மா காந்தி எழுதிய கட்டுரையை இங்கே ஆசிரியர் கோடிட்டுக் காட்டுகிறார். நாம் இந்தியர்கள் என்பதை இங்கு பெருமையுடன் நினைத்துக் கொள்ளலாம்.

அதான் இஸ்ரேல் பிறந்து விட்டது அப்புறம் என்ன என்கிறீர்களா? இனிமே தான் கதையில் "Twist".

தொடரும்..

Comments

Popular posts from this blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா