நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி - 6
ஒரு அப்பத்தை குரங்கிடம் கொடுத்து சரி சமமாக பங்கு கேட்ட இரண்டு பூனைகளுக்கு நடந்த கதை உங்களுக்கு தெரியும் தானே? அதே முடிவு தான் ஐ.நா. கொடுத்த நிலத்தை ஏற்காத பாலஸ்தீனுக்கும் நடந்தது. எகிப்து, லெபனான், சிரியா, ஈராக், ஜோர்டான் கூட்டணியில் பாலஸ்தீன் அன்று பிறந்த இஸ்ரேலை எதிர்த்தது. எதிர்பாரா விதமாக இஸ்ரேலின் கை ஓங்க, ஐ.நா. அமைதிப் பேச்சு எடுக்க.. வென்ற பகுதிகளை கூட்டணி நாடுகள் தங்கள் வசப்படுத்திக் கொண்டு பாலஸ்தீனை கைவிட்டு விட்டது. இப்போது பாலஸ்தீனமே வரைபடத்தில் இருந்து இல்லாமல் போனது..பாலஸ்தீனியர்கள் முதல் முதலாக அகதிகள் ஆகினார்கள்!!!
இப்படியாக சென்று கொண்டிருந்த கதைக்கு ஒரு Break கொடுத்து விட்டு பாலஸ்தீனியர்களுக்கு ஓரளவு நன்மை செய்ய முயற்சி செய்த யாசர் அராபத் பற்றி சற்று விரிவாகவே எழுதியிருக்கிறார். தமிழ் சினிமா பார்ப்பது போல் இருந்தது!!!
வரலாற்றில் இஸரேலுக்கு பெயர் வாங்கித் தந்த சூயஸ் கால்வாய் பிரச்னையைப் பற்றியும் "Three Musketeer" Operation குறித்தும் சுவாரஸ்யமாக விவரிக்கிறார். Side Track-ல் எகிப்தின் ராணுவ ஆட்சியும் அங்கிருந்த அரசியில் சூழல் பற்றியும் நமக்கு தெரிவித்து விடுகிறார்.
அதற்கடுத்து இஸ்ரேல் ஆரம்பித்த "ஆறு நாள் யுத்தம் " பற்றி எழுதுகிறார். இப்போரின் முடிவில் இஸ்ரேலின் பரப்பளவு அது எதிர்பார்த்தது போல் பெருகியது என்கிறார். நடு நடுவே நமக்கு புரிவதற்காக இந்திய-பாகிஸ்தான் பிரிவினை, பங்களாதேஷ் உருவான விதம் ஆகியவற்றை ஒப்பிட்டு சொல்கிறார்.
இவ்வாறு இஸ்ரேல் பிளான் செய்து அடித்துக் கொண்டிருக்க பாலஸ்தீன அரேபியர்கள் கேட்க நாதியில்லாமல் பாலைவனத்தில் அலைந்து கொண்டிருந்தனர் ஆயுதங்களுடன். அப்போது அவர்களுக்கு ஓரளவு உதவும் நோக்கில் (அவரும் ஆயுதம் ஏந்துபவர் தான்..18 போராளி இயக்கங்களின் தலைவர்!) யாசர் அராஃபத் P.L.O-வின் தலைவராகிறார் அப்படியே நாம் தொலைக்காட்சியில் அடிக்கடி கேட்டிருப்போமே "ஹமாஸ்" என்ற தீவிரவாத அமைப்பும் உருவானது.
இதுவரை வெற்றியை மட்டுமே பார்த்து வந்த இஸ்ரேலுக்கு ஹமாஸின் தாக்குதலையும் அவர்களின் "ஜிஹாத்"-யையும் சமாளிக்க முடியவில்லை. Tel Aviv-ல் நடந்த, நடக்கும் தாக்குதலைத் தான் பார்த்திருக்கோமே? பார்க்கும் இடங்களில் எல்லாம் ரத்த ஆறு ஓடியது.
தொடரும்..
Comments
Post a Comment