மகாமுனி

"சார்பட்ட பரம்பரை" பத்தி நீ ஜாஸ்தி பேசிட்ட அதனால உனக்கு இன்னொரு ஆர்யா படத்தை Suggest பண்றேன்னு Amazon Prime மேலே எடுத்துக் குடுத்து நேத்து நான் பார்த்த படம் "மகாமுனி". 

2019-ல் வெளிவந்த இந்த படத்தைப் பற்றிய  பாசிட்டிவ் கருத்துக்கள் சமூக வலைதளங்களில்  அவ்வருடத்தில் பதிவானது எனினும் Trailer பாக்கவே சீரியஸா இருக்கேன்னு நாங்க Skip செய்த படம் தான் இந்த "மகாமுனி".

பெற்றோர்களால் அனாதைகளாக கைவிடப்படும் குழந்தைகள் எவ்வித சூழலில் வளர்க்கிறார்களோ அதன் தாக்கமே அவர்களிடம் மேலோங்கி இருக்கும், அவர்கள் அதிலிருந்து வெளி வர விரும்பினாலும் சமூகம் அதை அனுமதிப்பதும் இல்லை  என்பதை இப்படம் மிகத்தெளிவாகச் சொல்லிச் செல்கிறது. 

ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் நினைத்தது போலவே இருந்தது எனினும் நான் பயந்த வன்முறை இல்லை. கடுகளவேயான  கதையை எவ்வாறு சுவாரசியமான திரைக்கதையாக மாற்றலாம் என்று இயக்குனர் சாந்தகுமாரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். இவருடை முதல் படமான "மௌனகுரு" அளவிற்கு இல்லை என்றாலும் அதனுடைய தாக்கம் இருந்தது எனலாம்.

கதை ஆமை வேகத்தில் நகர்ந்தாலும் ஏதோ ஒன்று நம்மை ஆர்வம் குறையாமல் உடன் அழைத்துச் சென்றது என்னை பொறுத்தவரை அது ஆர்யாவின் நடிப்பு!! படம்  முழுக்க கலக்கியிருக்கிறார். அவருடைய Unique Voice-ல் சில தத்துவ வசனங்கள் எடுபடவில்லை என்றாலும் ஓகே தான்.

Expressive Face இந்துஜா, Rebel Look மஹிமா என்று இரண்டு கதாநாயகிகள். இருவரின் நடிப்பும் போதுமான அளவிற்கு இருந்தது எனலாம். ரோஹிணி-க்கு சொல்லிக் கொள்ளும்படி நடிக்க வாய்ப்பு இல்லை. காளி வெங்கட் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

இதர கதாபாத்திரங்களும் அவர்களுக்களிக்கப்பட்ட வேடங்களை செம்மையாகவே செய்திருக்கிறார்கள்.

முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் இயக்குனருக்கு எட்டு வருட இடைவெளி அதுல நிறைய புத்தகம் படித்திருப்பார் போல. இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் பைகள். கருவேல மரங்கள் ஒழிப்பு, விவேகானந்தர் கூறிய கருத்துக்கள், திருக்குறளின் சிறப்பு, குழந்தைகளின் தேவையற்ற செல்போன் பிரயோகம், Junk Food சாப்பிடும் குழந்தைகள், ஆன்மீகம், ஆணவக்  கொலைகள் என்று அங்கங்கே கருத்துக்களை தெளித்துக் கொண்டே செல்கிறார். 

ஆர்யா டியூஷன் சென்டரில் மாணவர்களுக்கு கூறும் அறிவுரை மற்றும் தனது மகனிடம் கேக் கடையில் சொல்லும் கருத்தும் அருமை.

 பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக காட்டப்படும் ஆர்யா அதில் பொருந்தவில்லையே என்று நமக்குத் தோன்றக் கூடாது என்று அவர் பிறப்பில் அவ்வாறு அல்ல என்று ரோகிணி மூலம் கூற வைத்திருப்பது இயக்குனரின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மிக எளிமையாக நேர்கோட்டில் செல்லும் இப்படத்தை முடிந்தால் பாருங்கள். ஏற்கனவே பார்த்து விட்டேனே என்றால் உங்களுடைய கருத்துக்களை கமெண்டில்  பகிர்ந்து கொள்ளுங்கள்.

பின் குறிப்பு : ஆர்யாவின் மகனாக வரும் பையனும் சிறு வயது ஆர்யாவாகக் காட்டப்படும் சிறுவனும் ஒருவர்  தானா???

Comments

Popular posts from this blog

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - Montreal #roadtrip #travel_blog