கர்ணன்
ஏப்ரல் மாதம் Prime-ல் வெளியான இப்படத்தைப் பார்க்க இப்பொழுதுதான் எனக்கு தைரியம் வந்தது. படத்தின் One Liner-யைத் தவிர வேறு விவரங்கள் எனக்குத் தெரியாததாலும் இப்படத்தைப் பற்றிய Promo-க்களை அதிகம் பார்க்காததாலும் எனக்கு படம் நேற்று வெளிவந்தது போன்ற தாக்கத்தையே ஏற்படுத்தியது.
"பரி ஏறும் பெருமாள்"-யைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு தான் இந்த " கர்ணன்". எதிர்பார்த்த அளவு படத்தில் வன்முறை இல்லை எனினும் "இதோ இவனை கொலை செஞ்சுருவாங்க போல", "இந்த சின்ன பையனை ஏதாச்சும் பண்ணிருவங்களோ" என்ற பதைபதைப்புடனேயே படம் பார்க்க வேண்டி இருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் அதற்குத் துணை செல்கிறது.
பாரதிராஜாவை அடுத்து மாரி செல்வராஜ் கிராமத்து வாழ்க்கையையும் அதன் மக்களையும் நம் கண் முன்னே அரிதாரம் பூசாமல் காட்டி இருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது. சொந்த அனுபவம் இல்லாமல் இதைச் செய்யவே முடியாது. மனதில் இருந்து வந்ததால் தான் வெற்றியும் அடைந்திருக்கிறது.
படத்தில் இயக்குனர் பல்வேறு குறியீடுகளின் மூலம் ஏகப்பட்ட சங்கதிகளைச் Subtle ஆக சொல்லிக்கொண்டே செல்கிறார். உதாரணமாக இதில் வரும் வாயில்லா ஜீவன்களை கவனியுங்கள். சமூகத்தின் கீழ்தட்டில் இருப்பவன் யானை மேல் வருவதும்..வரிசையில் காத்துக் கிடக்கும் வேளையில் அடிமாடுகளின் குழம்புகளைக் காட்டுவதும் குறிப்பாக கதாபாத்திரங்களின் பெயர்களைப் பார்த்தாலே மகாபாரதக் கதையை வேறு கோணத்தில் யோசிக்கத் தோன்றுகிறது இல்லையா?
கதாநாயகன் தனுஷ். அசுரன் Flashback கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாக என் கண்களுக்குத் தெரிந்தார். அவருக்கு ஏன் தேசிய விருது கிடைத்தது என்பதை மறுபடியும் இங்கு நியாப்படுத்தி இருக்கிறார் எனலாம். முகத்தில் கொஞ்சம் முதுமை எட்டிப் பார்கிறதோ..சே சே அது அனுபவம்.
ஊர் பெரியவர்களில் ஒருவராக வருகிறார் யோகி பாபு. குணச்சித்திர வேடம் என்றாலும் காமெடி Counter-ம் அங்கங்கே கொடுக்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார்.
எமன் கதாபாத்திரத்தில் வரும் மலையாள நடிகர் லால்-மறைந்த நடிகர் மணிவண்ணனை நினைவு படுத்துகிறார்.
கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நட்டி. இயல்பாக அவரின் நடையிலேயே நடித்திருக்கிறார் இருந்தும் அந்த ரோலில் பொருந்தி வருகிறார்.
கதாநாயகி முதல் குதிரை வளர்க்கும் சிறுவன் உட்பட அனைவரையும் நன்றாகவே நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஹீரோயின் "தவமாய் தவமிருந்து" படத்தின் கதாநாயகி பத்மப்பிரியா-வை நினைவு படுத்துகிறார்.
"படத்த ஏன் இவ்வளவு வன்முறை கலந்து எடுக்கணும்? " "இந்த கதாபாத்திரத்தை ஏன் இப்பிடி எழுதணும்?" என்றெல்லாம் நாம கேட்கலாம் ஆனால் அது இயக்குனரின் பார்வை அதை நாம் குறை கூற முடியாது- இதை நான் சொல்லல எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருக்கிறார்.
உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும் கர்ணன் ஒரு இயக்குனரின் திரைப்படம். நேரமிருந்தால் சற்று பொறுமையுடன் படத்தைப் பாருங்கள். அதோடு எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பில் வரும் "வணங்கான்" சிறுகதையையும் படித்தால் திரைப்படத்தின் புரிதலுக்கு உதவியாகவே இருக்கும் என்பது என் கருத்து.
Comments
Post a Comment