நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - Part 1

 இஸ்ரேல்- பாலஸ்தீன் இவ்விரு தேசங்களுக்கும் இடையே சுமூக உறவு இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்தது என்றாலும் அதற்கான மூல காரணங்கள் எவை என்று  நம்மில் பலருக்குத்  தெரியுமா என்பது சந்தேகமே. இந்நிலையில் கடந்த மே மாதம் (2021) இரு நாடுகளுக்குமிடையே வெடிகுண்டு தாக்குதல்கள்  நடந்ததையும் அதில் பொது மக்கள் சிக்குண்டு தவிப்பதையும் தொலைக்காட்சி செய்திகளில் கண்ட எனக்கு பல்வேறு கேள்விகள் மனதில் எழ, வழக்கம் போல் என்னுடைய கணவரிடம் அதைப் பற்றி வினவ, "உனக்கு விரிவா தெரிஞ்சுக்கணுமா? ஆசிரியர் பா.ராகவன் எழுதிய "நிலமெல்லாம் ரத்தம் - புத்தகத்தை படி" என்று கூறுயதோடு Kindle பதிப்பை  வாங்கியும் கொடுத்து விட்டார்.

இதே ஆசிரியரின் படைப்பான  "டாலர் தேசம்" புத்தகத்தை சென்ற ஆண்டு படித்த எனக்கு அவரின் நடை பிடித்திருந்தது எனவே நானும் "நிலமெல்லாம் ரத்தம்" வாசிக்க ஆர்வத்துடன் ஆயத்தமானேன்.

என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அனைவரும் படிப்பதற்கு மற்றும் தகவல்களை உள்வாங்கிக் கொள்வதற்கு வசதியாக விமர்சனத்தை தொடராக பதிவிடுகிறேன். என்னுடைய இந்த முயற்சி உங்களையும் இந்த புத்தகத்தை படிக்க  At least சில விஷயங்களை Google செய்யவாவது தூண்டும் என்று நம்புகிறேன். இனி கட்டுரைக்குள் செல்வோமா?

பகுதி -1

"மதம், அரசியல், உணர்ச்சி" என்று சேரக்கூடாத இந்த மூன்று அம்சங்களும் ஒன்று சேர்ந்ததுதான் இவ்விரு தேசங்களுக்குமான பிரச்சனை தொடர்வதற்குக் காரணம் என்று கூறும் ஆசிரியர் புத்தகத்தை "கல் தோன்றி, மண் தோன்றா" என்று நாம் கூறுவது போல ஆரம்பப் புள்ளியான யூத மதம் தோன்றிய கால கட்டத்தில் இருந்து தொடங்குகிறார். 

ஜுதேயா என்று அழைக்கப்பட்ட அன்றைய இஸ்ரேல் ஆழ்ந்த மதப்பற்று மிக்க ஹாஸ்மோனியன்களால் ஆளப்பட்டு வந்தது. அதை தன் வசம் கொண்டு வர விரும்பிய ஹாஸ்மோனிய கவர்னர் அன்றைய சிரியாவை ஆண்டு வந்த ரோமானிய மன்னரின் உதவியை நாடுகிறார். கி.மு.37-ம் ஆண்டு தொடங்கி அடுத்த 33 வருடங்கள் அந்த நிலத்தை ஆண்ட அக்கவர்னரின் பெயர் "ஹெரோத்". இஸ்ரேலின் முதல்  சர்வாதிகாரியான இவரின் ஆட்சிக்கு பயந்து முதல் முதலாக  இஸ்ரேலியர்கள் நாட்டைத் துறந்து அகதிகளாக வெளியேறத் துவங்கியது அன்று தான்!!! 

இவரது ஆட்சி காலத்தில் தான் "ஜோஷுவா" என்று ஹீப்ரு மொழியில் அழைக்கப்பட்ட இயேசு பிறக்கிறார்!!!

மன்னர் சாலமன் காலத்தில் கட்டப்பட்ட புராதனமான யூத ஆலயம் ஹெரோதின் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக இவரை யூத மக்கள் இன்றளவும்   நினைவிலும் சரித்திரத்திலும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று ஆசிரியர் கூறுகிறார்.   

இதற்குப் பிறகு இயேசுவின் பிறப்பு மற்றும் இறப்பைப் பற்றி துல்லியமான புள்ளி விவரங்களுடன் விவரிக்கும் ஆசிரியர் அன்றைய இஸ்ரேலின் ரோமானிய கவர்னராக இருந்த பிலாட்-ன் ஆணை மற்றும் யூத குருமார்களின் ஆலோசனைப் படி தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்று கூறுகிறார்.

அதன் பிறகு எவ்வாறு கிறித்தவ மதம் வளர்ந்தது, நாடு முழுவதும் எவ்வாறு பரவியது என்பதை சுட்டிக் காட்டும் ஆசிரியர் Paul என்பவர் தான் கிருத்தவ மதத்தின் முதல் மத போதகர் என்ற தகவலைத் தருகிறார். ரோமில் கொல்லப்படுகிறார் Paul. ஏசுவைக் கொன்றவர்கள் ரோமானியர்கள் ஆனால் அதே ரோம் தான் கிருத்தவ மதத்தின் தலைமைப் பீடமாகவும் ஆகிப்போனது இன்று!!!

சரி இஸ்ரேல் பிரச்சனைக்கு வாங்க என்று நீங்கள் கூறுவது புரிகிறது. அடுத்த பகுதியில் பார்க்கலாம் :)

தொடரும்..

Comments

Popular posts from this blog

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - Montreal #roadtrip #travel_blog