Subconscious Spoilers of Sarpatta Parambarai
"சார்பட்ட பரம்பரை" படத்தின் கதை என்ன? அதில் நடித்த நடிகர்கள் எப்படித் தங்கள் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்கள்? இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய முந்தைய படங்களில் இருந்து எவ்வாறு இதில் மாறுபடுகிறார்? படத்தின் கதைக்களம் எந்த காலகட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது? என்றெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லை. சமூக வலைத்தளங்களைத் திறந்தாலே பல நூறு பேர் இதைப் பற்றிப் பேசிக் கொண்டும், பல இலட்சம் பேர் அதைக் கேட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். கடந்த இரண்டு தினத்தில் "Dancing Rose" பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை என்று கூறுங்கள் பார்க்கலாம்?!
Disclaimer : கீழே எழுதப்பட்டிருக்கும் கட்டுரை You Tube-ல் இந்த படத்தை பற்றிய Promo-க்களைப் பார்த்து நரம்பு முறுக்கேறியிருக்கும் ரசிகர்களுக்கு அல்ல 😀
கடந்த வியாழக்கிழமை அமேசான் ப்ரைம்-ல் வெளிவந்திருக்கும் இப்படத்தை நேற்று பார்க்கும் போது என்னுள் ஓடிய எண்ணங்களை மட்டும் உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேனே!!!
ஒரு சலூன் கடையில் ஒரே முடி திருத்துபவரிடம் முடி வெட்டிக் கொண்டவர்களைப் பார்த்தாலோ, ஒரே டெய்லரிடம் சட்டை, பாண்ட் தைத்து போட்டவர்களைப் பார்த்தாலே ஒரு ஒற்றுமை தெரியும் அதைப் போலவே இந்த படத்தில் வரும் அனைத்து Boxer-களும் ஒன்று போலவே மீசை, கிராப், கட்டு மஸ்தான உடம்பு என்று "Tailor Made " கெட்டப்பிலும் பெண்கள் இரட்டை மூக்குத்தி, கனகாம்பரம் என்றும் வலம் வருகிறார்களே?
பசுபதி, G.M. குமார், ஜான் விஜய், கலையரசன் போன்ற பல குணச்சித்திர கதாபாத்திரங்கள் கதை நடப்பதாகக் காட்டப்படும் சென்னை ஏரியாவில் கண கச்சிதமாகக் பொருந்துகிறார்கள் ஆனால் ஆர்யா உட்பட எந்த Boxer-களும் லோக்கலா தெரிய மாட்டேங்குறாங்களே?
படத்தில் பேசுகிறார்கள்..பேசுகிறார்கள்..பேசிக் கொண்டே இருக்கிறார்கள் அதுவும் உச்ச ஸ்தாயியில், பல நேரம் பின்னணியில் ஓடும் பாக்ஸிங் கமென்டரியையும் தாண்டி கேட்கும் படி கழுத்து நரம்பு புடைக்க கத்திப் பேசுகிறார்கள். நல்ல வேலை Sub Titles இருக்கு 😅
ஒரே பாட்டில் எப்பிடி முன்னேறுவது என்று விக்ரமன் படத்தில் வரும் ஆனால் பாட்டே இல்லாமல் சந்தோஷ் நாராயணனின் அதிரடி BGM-ல் முன்னாலிருந்து எவ்வாறு பின்னுக்கு வருவது என்று காட்டியிருக்கிறார்கள். Six Pack to Family Pack (தொப்பை) Arya body transformation awesome!!
படத்தின் பல காட்சிகள் புதுப்பேட்டை, வட சென்னை, சுப்ரமணியபுரம் போன்ற படங்களை நினைவு படுத்தினாலும் அந்த அளவிற்கு கதையில் ஆழம் இல்லையோ? என்று எண்ணத் தோன்றியது.
ரஞ்சித் தன்னுடைய படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் மிக நேர்த்தியாக விரிவாக எழுதக்கூடியவர். (அது Plus-ஆ, Minus-ஆ என்று தெரியவில்லை ஏனென்றால் படத்தின் நீளத்தை அது பாதிக்கிறது)
அவர் படத்தில் ஒரே காட்சியில் வந்தாலே அவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். இந்த படத்திலும் எக்கச்சக்க நடிகர்கள். சிலருக்கு வசனம் கூட இல்லை ஆனால் அவர்களின் முக பாவனைகளை மிகச் சரியான இடத்தில காண்பித்து அவர்களை அடையாளம் காட்டி விடுகிறார். கிஷோர், Poster நந்த குமார் உட்பட.
வழக்கமான ரஞ்சித் படங்களில் வரும் வாயாடி கதாநாயகியாக வருகிறாரா? வருகிறார் Dushara. நடிப்பதற்கு நல்ல வாய்ப்புள்ள கதாபாத்திரம். நமக்குத்தான் இந்த சீன் எல்லாம் தேவையா? என்று சில இடங்களில் தோன்றுகிறது.
வழக்கமான ரஞ்சித் படங்களில் வரும் சோர்ந்த உள்ளதை தட்டி எழுப்பும் Rap ஸ்டைல் பாடல் வருகிறதா? ஆமாம் ஒன்று இரண்டு பாடல்கள் தான்.
வழக்கமாக ரஞ்சித் படங்களில் வரும் சாதீயம் சார்ந்த வசனங்கள் வருகிறதா? ஒன்றிரண்டு இடங்களில் உண்டு.
படம் முடிய முக்கால் மணி நேரம் இருக்கும் போது.. என்னுள் ஓர் எதிர்பார்ப்பு ..இதெல்லாம் தாண்டி படத்தில் பயங்கரமான Twist ஒன்னு வரும்..இதோ இப்ப வரப் போகுது..இப்ப ..இப்ப ..இப்ப ..படம் முடிஞ்சிருச்சு போயிட்டு வாங்க 🙏🙏🙏
விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் பல திரைப்படங்களிலிருந்து பல்வேறு இடங்களில் "சார்பட்ட பரம்பரை" வேறுபட்டிருந்தாலும்.. பொறுமை இருந்தால் இந்த மூன்று மணி நேர திரைப்படத்தை அதில் நடித்திருக்கும் நடிகர்களுக்காக ஒரு முறை பார்த்து விடுங்களேன் !!
Comments
Post a Comment